செய்திகள்

மீனவர்களின் வலியைப் பேசும் கட்டுமரக்காரன் பாடல்!

கட்டுமரக்காரன் பாடல் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் விக்னேஷ் ரவி நடித்த கட்டுமரக்காரன் பாடல் கவனம் பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் அதிக வெற்றிப் படங்களைக் கொடுத்த வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது.

தற்போது, திரைப்படத் தயாரிப்பைத் தாண்டி ஆல்பம் பாடல்களிலும் கவனம் செலுத்த ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அதன் முதல் பாடலாக நடிகர் கேகேவின் கனவே மற்றும் அசோக் செல்வன் - மிர்னா நடித்த ’18 மைல்ஸ்’ ஆகிய பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன.

இந்த நிலையில், மீனவர்களின் வலிகளைப் பேசும் கட்டுமரக்காரன் என்கிற புதிய பாடலை வெளியிட்டுள்ளனர். இதில், நடிகர் விக்னேஷ் ரவி முன்னணியாக நடிக்க, விபின் பாஸ்கர் இசையமைப்பில் பாடகர் அறிவு பாடியுள்ளார்.

தனசேகர் நாராயணன் இயக்கத்தில் உருவான இப்பாடல் யூடுயூபில் 10 லட்சம் பார்வைகளையும் கடந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப், புதின், ஜின்பிங் மூவருக்குமே மோடி நண்பர்! -குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

முட்டையில் மட்டும்தான் புரதம் இருக்கிறதா?

வாங்கடா... வெளியானது பவன் கல்யாணின் ஓஜி டிரைலர்!

துரைமுருகனுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

ஓய்வு முடிவை திரும்பப் பெற்ற குயிண்டன் டி காக்! மீண்டும் தென்னாப்பிரிக்க அணியில்..!

SCROLL FOR NEXT