நடிகர் தனுஷ் திருச்சியில் கொட்டும் மழையில் பாடல் பாடிய விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இட்லி கடை திரைப்படம் வரும் அக்.1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
நடிகர் தனுஷ் அவரே இயக்கி நடித்துள்ள இட்லி கடை திரைப்படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் டாவ்ன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் நித்யா மெனன், அருண் விஜய், ராஜ் கிரண், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
படத்தின் முன் வெளியீட்டு புரமோஷனுக்காக திருச்சிக்குச் சென்ற தனுஷ் அங்கு மழையிலும் இட்லி கடை படத்தில் வரும் ’என் பாட்டன் சாமி வரும்...’ எனும் பாடலைப் பாடினார்.
இந்த விடியோ சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.