கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரத்தில், நம் வாழ்வை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற புத்தியை பாமர மக்களுக்கு கொடு இறைவா என நடிகர் ராஜ்கிரண் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது நேர்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த துயர சம்பவம் குறித்து நடிகர் ராஜ்கிரண் பதிவிட்டுள்ளதாவது,
''மிகப்பெரும் மன அழுத்தத்தையும், பரிதவிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. என்னதான் ஆறுதல் படுத்தப்பார்த்தாலும் மனம் தவிப்பதை, என்னால் நிறுத்த முடியவில்லை.
எனக்கே இந்த நிலையென்றால், நாற்பது உயிர்களை துள்ளத்துடிக்க சாகக்கொடுத்த, அந்தக்குடும்பங்களின் நிலைமை என்னவாகும்.
இறைவா, அந்தக்குடும்பங்களை ஆறுதல் படுத்து. இனிமேலும் இப்படியான கூட்டங்களில் போய் உயிரை விடாமல், நம் வாழ்க்கையை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற புத்தியை, எல்லா பாமர மக்களுக்கும் கொடு'' எனப் பதிவிட்டுள்ளார்.
40 பேர் பலி
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மூன்றாவது கட்டமாக நாமக்கல், கரூரில் பிரசாரப் பயணம் மேற்கொண்டார். நாமக்கல் நிகழ்வை முடித்துக் கொண்டு, 7 மணி நேரம் தாமதமாக கரூருக்கு சனிக்கிழமை இரவு வந்தபோது, அவரைக்காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.
அவர் இரவு 7 மணியளவில் பேசத் தொடங்கியபோது, ஒருவரையொருவர் முந்திக்கொண்டு கூட்டம் அலைமோதியது. இதில், கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் நேற்று பலியாகினர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் ஒருவர் இன்று பலியானதால், கூட்ட நெரிசல் பலி எண்ணிகை 40 ஆக அதிகரித்துள்ளது.
நெரிசலில் சிக்கி பலியான 40 பேரின் உடல்களும் உடற்கூராய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிக்க | கரூர் பலி: மம்மூட்டி, மோகன்லால் இரங்கல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.