முகப்பு
செய்திகள்

தேவரா 2 தொடக்கம்: அறிவிப்பை வெளியிட்டது படக்குழு!

ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகும் தேவரா 2 குறித்து...

Updated On : 28 செப்டம்பர் 2025, 1:25 pm IST
தேவரா படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / என்டிஆர் ஆர்ட்ஸ்
பகிர்:

ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகும் தேவரா 2 படத்தின் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

கொரடால சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் கடந்தாண்டு செப்.27ஆம் தேதி தேவரா திரைப்படம் வெளியானது.

இந்தப் படத்தில் ஜான்வி கபூர், சயிப் அலிகான், நந்தமுரி கல்யாண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

Advertisement

Advertisement

இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக ரூ.500 கோடி வசூலித்ததாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

கடந்தாண்டு நவ. 8 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகியது.

இந்தப் படத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறதென படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

யுவசுதா ஆர்ட்ஸ், என்டிஆர் ஆர்ட்ஸ் இந்தப் படத்தை தயாரித்து இருந்தது. இதன் இரண்டாம் பாகத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு போஸ்டருடன் வெளியிட்டுள்ளது.

summary

The makers of the Telugu film "Devara: Part 1", headlined by Jr NTR, have confirmed its sequel on the occasion of the film's first anniversary.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments