ஜன நாயகனுக்குத் தணிக்கைச் சான்று?
ஜன நாயகன் தணிக்கைச் சான்று குறித்து...
ஜன நாயகன் திரைப்படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் திரைப்படம் சென்சார் பிரச்னைகளால் பொங்கல் வெளியீட்டிலிருந்து ஒத்திவைக்கப்பட்டது. பின், மறுதணிக்கை செய்யப்பட்டு மே மாத வெளியீடாக வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சமூக வலைதளங்களில் இப்படத்தின் முதல் 5 நிமிடக் காட்சி வெளியானது.
தொடர்ந்து, முழுப்படமும் இணையத்தில் கசிந்து திரைத்துறையினர் முதற்கொண்டு பலரையும் அதிர்ச்சியடையச் செய்தது. மேலும், இப்படத்தைப் பகிர்வோர்கள் உரிமையியல், குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என தயாரிப்பு நிறுவனம் எச்சரித்து வக்கீல் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படத்திற்கான சென்சார் சான்றிதழைத் தணிக்கை வாரியம் வருகிற ஏப். 24 ஆம் தேதி தயாரிப்பு நிறுவனத்துக்கு கொடுக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சான்றிதழ் கிடைத்ததும் ஏப்ரல் வெளியீட்டிலேயே ஜன நாயகனைத் திரைக்குக் கொண்டு வருவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
Information regarding the censor certificate for the film Jana Nayagan has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.