முகப்பு
செய்திகள்

கந்துலா சுலோசனா ராணியாக அனுபமா பரமேஸ்வரன்!

நடிகை அனுபமா பரமேஸ்வரனின் புதிய திரைப்படம் குறித்து...

Updated On : 30 ஏப்ரல் 2026, 12:59 pm IST
அனுபமா பரமேஸ்வரன். - படம்; எக்ஸ் / சம்பத் நந்தி.
பகிர்:

நடிகை அனுபமா பரமேஸ்வரனின் புதிய திரைப்படத்தின் கதாபாத்திர போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் கந்துலா சுலோசனா ராணியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.

ஸ்ரீ சத்யா சாய் ஆர்ட்ஸ் தயாரிப்பில் சம்பத் நந்தி இயக்கத்தில் உருவாகியுள்ள போகி எனும் தெலுங்கு படத்தில் அனுபமா பரமேஸ்வரன் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சர்வானந்த் இதில் நாயகனாக நடிக்க டிம்பிள் ஹையாதி, அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நாயகிகளாக நடித்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement

1960ல் தெலங்கானா, மகாராஷ்டிரா எல்லைப் பிரச்னைகளை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கந்துலா சுலோசனா ராணியாக அனுபமா பரமேஸ்வரன் இதில் நடித்துள்ளதாக இயக்குநர் போஸ்டரை வெளியுட்டுள்ளார். இந்தப் படம் வரும் ஆக.28ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

இது குறித்து இயக்குநர், ” உலகமே... எங்களது கந்துலா சுலோசனா ராணியைச் சந்தியுங்கள். இயற்கையின் குழந்தை, கங்கையின் தாய், கந்துலாவின் பெருமை, போகி படத்தின் ஆன்மா’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

summary

Anupama Parameswaran’s look as Kandula Sulochana Rani from Bhogi unveiled

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.