முகப்பு
செய்திகள்

பிரம்மாண்டமாக உருவாகும் தனுஷ் - 55!

தனுஷ் - 55 குறித்து....

Updated On : 4 பிப்ரவரி, 2026 at 10:41 AM
நடிகர்கள் தனுஷ், மம்மூட்டி, ஸ்ரீலீலா, சாய் பல்லவி
பகிர்:

நடிகர் தனுஷின் 55-வது திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது.

நடிகர் தனுஷ், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தன் 55-வது படத்திற்குத் தயாராகி வருகிறார். இப்படத்தை தனுஷே தயாரிக்கவும் செய்வதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இப்படத்தில் நாயகிகளாக நடிகைகள் சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சில நாள்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

தற்போது, நடிகர் மம்மூட்டி இணைந்துள்ளதையும் அறிவித்துள்ளனர். இதனால், இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

காரணம், பேரன்பு திரைப்படத்திற்குப் பின் நடிகர் மம்மூட்டி தமிழில் எந்தப் படத்தில் நடிக்கவில்லை. நீண்ட காலம் கழித்து வருவது கவனம் ஈர்த்துள்ளது.

மேலும், இப்படத்தை முதலில் கோபுரம் ஃபிலிம்ஸ் அன்புச்செழியன் தயாரிக்க இருந்தார். ஆனால், பட்ஜெட் அதிகரிப்பால், அவர் விலக தனுஷே தயாரிக்க முடிவு செய்துள்ளார். தகவல்களின்படி, இதுவே தனுஷின் முதல் பிரம்மாண்ட பட்ஜெட் திரைப்படமாக உருவாகிறதாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.