முகப்பு
செய்திகள்

43 ஆண்டுகளுக்குப் பின்..! டி. ராஜேந்தரின் உயிருள்ளவரை உஷா மறுவெளியீடு!

நடிகர் டி. ராஜேந்தரின் “உயிருள்ளவரை உஷா” திரைப்படம் மறுவெளியீடு...

Updated On : 12 பிப்ரவரி 2026, 10:03 pm IST
- dinmani online
பகிர்:

நடிகர் டி. ராஜேந்தர் (டி.ஆர்.) இயக்கி நாயகனாக நடித்த “உயிருள்ளவரை உஷா” திரைப்படம் மறுவெளியீடு செய்யப்படுகின்றது.

நடிகர் டி. ராஜேந்தர் இயக்கி நாயகனாக நடித்து கடந்த 1983 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “உயிருள்ளவரை உஷா”. இப்படம், வெளியான காலத்தில் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

நடிகர்கள் ராதாரவி, நளினி, சரிதா, கவுண்டமணி, வெண்ணிறாடை மூர்த்தி உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு, நடிகர் டி. ராஜேந்தர் இசையமைத்திருந்தார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், காதலர் நாளை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை (பிப். 13) ”உயிருள்ளவரை உஷா” திரைப்படம் திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி, தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் நடிகர் டி. ராஜேந்தரின் மகனும் பிரபல நடிகருமான சிலம்பரசன், “இந்த கிளாசிக் (படம்) மீண்டும் ஒருமுறை அதற்கு உரிய முறையில் கொண்டாடப்படட்டும்” எனக் கூறியுள்ளார்.

summary

The film “Uyirullavarai Usha”, directed by actor T. Rajendran (T.R.), is being re-released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.