தேவைகளைக் கூச்சப்படாமல் கேளுங்கள்: பிரதீப் ரங்கநாதன்
கல்லூரி விழாவில் பிரதீப் ரங்கநாதன் பேச்சு....
நடிகர் பிரதீப் ரங்கநாதன் தேவைகளைக் கூச்சப்படாமல் கேட்க வேண்டுமென மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’, ‘டிராகன்’ மற்றும் ‘டியூட்’ ஆகிய திரைப்படங்கள் தொடர்ந்து ரு.100 கோடிக்கும் மேல் வசூலித்து வெற்றி பெற்றுள்ளன. இவர் நடித்த எல்ஐகே திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
அடுத்ததாக, ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குவதுடன் அதில் நாயகனாகவும் பிரதீப் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கல்லூரி நிகழ்வில் மாணவர்கள் மத்தியில் பேசிய பிரதீப் ரங்கநாதன், ”வாழ்க்கை மிக சிறியது. நமக்கான தேவைகளைக் கேட்க எப்போதும் கூச்சப்படாதீர்கள். பிறர் என்ன நினைப்பார்கள் என யோசிக்காமல் தைரியமாகக் கேட்டு விடுங்கள். கேட்டு மறுக்கப்பட்டால் ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆனால், அது கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதுதான் முக்கியம்” எனக் கூறியுள்ளார்.
actor pradeep ranganathan's share his life advise to students
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.