பிரதீப் ரங்கநாதன் படத்தில் இணைந்த அஸ்வத் மாரிமுத்து?
அஸ்வத் மாரிமுத்து
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து புதிய திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
நடிகர் பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இதன் முதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. நாயகியாக மமிதா பைஜூ நடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இப்படத்தில் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து காவல்துறை அதிகாரியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. டிராகன் திரைப்படம் மூலம் பெரியளவில் கவனிக்கப்பட்ட அஷ்வத், அப்படத்திலேயே சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
Advertisement
Advertisement
தற்போது, கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் பிரதீப் தயாரிக்கும் படத்தில் இணைந்துள்ளாராம். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
It is reported that director Aswath Marimuthu will play the role of a police officer in a new film.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.