தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களுக்கு சரியான வாய்ப்பு கிடைப்பதில்லை: ராதிகா
திரை எழுத்தாளர்கள் குறித்து ராதிகா பேசியுள்ளார்...
நடிகை ராதிகா தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களுக்கு சரியான வாய்ப்புகள் கிடைப்பதில்லை எனக் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் மிகத் திறமையான நடிகர், தயாரிப்பாளர் எனப் பெயரெடுத்தவர் ராதிகா சரத்குமார். கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தின் மூலம் திரை வாழ்வை ஆரம்பித்த ராதிகா 48 ஆண்டுகளாக திரைத்துறையில் இருக்கிறார்.
பல கதாநாயகர்களுக்கு நாயகியாகவும் அம்மாவாகவும் நடித்தவர் தற்போது தாய் கிழவி என்கிற திரைப்படத்தில் வயதான தோற்றத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் பிப். 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய ராதிகா, “தமிழ் சினிமாவில் திரை எழுத்தில் பெரிய தொய்வு இருக்கிறது. மலையாளத்தில் திரை எழுத்து வேறு பரிணாமத்தை அடைந்துவிட்டது. மலையாளத்தில் வெளியான எகோ (EKO) திரைப்படத்தின் கதையைச் சொன்னால் தமிழில் யாராவது நடிப்பார்களா? இவர்களுக்கு (தமிழ் நாயகர்கள்) பறந்து அடிக்க வேண்டும்.
நடிகர் ரஜினிகாந்த், தனக்கு வித்தியாசமான கதைகளில் நடிக்க அதிக ஆர்வம் இருப்பதாக என்னிடம் கூறினார். ஆனால், அவரால் நடிக்க முடியாத சூழலே இருக்கிறது. தமிழ் சினிமாவில் நல்ல வலுவான எழுத்து இல்லாததற்கு காரணம், இங்கு எழுத்தாளர்களுக்கு சரியான வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்றே நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
actor radhika sarath kumar shares her thoughts on script writing in tamil
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.