முகப்பு
செய்திகள்

அஞ்சலி செலுத்தும் இடம் சர்க்கஸ் போல் ஆகிவிட்டது: நடிகை ராதிகா

மறைந்த இயக்குநர் பாக்யராஜ் அஞ்சலி இடம் குறித்து ராதிகா...

Updated On : 29 ஜூன் 2026, 1:54 pm IST
பகிர்:

நடிகை ராதிகா மறைந்த இயக்குநர் பாக்யராஜின் அஞ்சலி நிகழ்வு சர்க்கஸ் போல் ஆகிவிட்டது என வேதனையடைந்துள்ளார்.

இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்குப் பின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது உடலையும் அங்கு வரும் பிரபலங்களையும் பதிவு செய்ய நூற்றுக்கணக்கான ஊடகத்தினர் குவிந்தனர். தமிழின் முன்னணி செய்தி நிறுவனங்களைத் தவிர்த்து, ஏகப்பட்ட யூடியூப் சேன்ல்கள் காணொலிகளை எடுக்க நெரிசலை ஏற்படுத்தியதுடன் திரும்பிய பக்கமெல்லாம் கேமராக்களை வைத்தது சர்ச்சையானது.

இந்த நிலையில், நடிகை ராதிகா சரத்குமார் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

அதில், “50 ஆண்டுகால சிறப்பான நட்புக்கு, மகத்தான படைப்பாளிக்கு, சினிமாவின் எல்லைகளை வரைந்தவருக்கு, பல சிரிப்புகளைப் பகிர்ந்தவருக்கு, எப்போதும் என் குடும்பத்துடன் விஸ்வாசமான வழியில் நின்றவருக்கு இறுதியாக ஒரு குட்பை! அமைதியாக செலுத்த வேண்டிய அஞ்சலி இடம் சர்க்கஸ் போல் ஆகிவிட்டது. எப்போது, எங்கே நாம் இந்த அளவுக்கு இரக்கமற்றவர்களாக மாறினோம்?

மறைந்தவரின் ஆன்மாவுக்கு உரிய கண்ணியமும் மரியாதையும் கிடைப்பதை உறுதி செய்ய, அரசு மற்றும் திரைத்துறை இணைந்து தெளிவான நடைமுறைகளையும், ஒருங்கிணைந்த நிர்வாகத் திட்டங்களையும் வகுக்க வேண்டிய நேரம் இது." என வேதனையுடன் கூறியுள்ளார்.

Actress Radhika has expressed her anguish, stating that the tribute event for the late director Bhagyaraj turned into a circus.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments