8 ஆண்டுகளாக வாட்ஸ் ஆப் பயன்படுத்தாத ரஜிஷா!
சமூக வலைதளப் பயன்பாடு குறித்து ரஜிஷா விஜயன்...
நடிகை ரஜிஷா விஜயன் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ், மலையாள சினிமாவில் பிரபலமாக இருப்பவர் ரஜிஷா விஜயன். தமிழில், இவர் நடித்த கர்ணன், சர்சார், பைசன் ஆகியவை வெற்றிப்படங்களாக அமைந்தன.
தற்போது, மஸ்திஷ்கா மரணம் என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற பிப். 27 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய ரஜிஷா விஜயனிடம் சமூக வலைதளப் பயன்பாடு குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு ரஜிஷா, “நான் கடந்த 8 ஆண்டுகளாக வாட்ஸ் ஆப் செயலியைப் பயன்படுத்துவது இல்லை. கல்லூரி படிப்பை முடித்ததும் முகநூலிலிருந்தும் விலகினேன். இன்ஸ்டாகிராமையும் எப்போதாவதுதான் பயன்படுத்துகிறேன். நிஜ உலகத்தை எதனாலும் மாற்ற முடியாது. நேருக்கு நேர் உரையாடுவதுதான் எனக்கு பிடிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
rajisha vijayan about social media usages
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.