முகப்பு
செய்திகள்

ரஜினி - கமல் படத்தின் புரோமோ!

நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ரஜினி - கமல் படத்தின் புரோமோ குறித்து...

Updated On : 21 பிப்ரவரி 2026, 12:15 pm IST
கமல், ரஜினி காந்த். - படங்கள்: யூடியூப் / ரெட் ஜெயண்ட் மூவிஸ்
பகிர்:

நெல்சன் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் புரோமோ வெளியாகியுள்ளது.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக இந்தப் படத்தை இன்பன் உதயநிதி தயாரிக்கிறார்.

நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் ஜூலை மாதம் வெளியாகும் எனத் தெரிகிறது.

Advertisement

Advertisement

இந்தப் படத்தை தொடர்ந்து ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் புதிய படத்திலும் ரஜினி நடிக்கிறார். இந்தப் படத்தை ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார்.

இந்நிலையில், அடுத்ததாக ரஜினி கமல் இணைந்து நடிக்கிறார்கள். சுமார், 47 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். நெல்சனின் பாணியில் கலகலப்பான ஸ்டைலான புரோமோவாக வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

summary

The promo of the new film directed by Nelson, starring actors Rajinikanth and Kamal, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.