தாய் கிழவி இரண்டாவது பாடல்!
தாய் கிழவி படத்தின் இரண்டாவது பாடல்...
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 9:13 PM
தாய் கிழவி திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் தாய் கிழவி.
சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இப்படத்தில் வட்டிக்கு விடும் பவுன் தாய் கதாபாத்திரத்தில் ராதிகா நடித்திருந்த டீசர் வெளியாகி பலரிடமும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
Advertisement
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 9:14 PM
மேலும், இதன் முதல் பாடலான, ‘தாய்கிழவி வாரா’ பாடலும் ஹிட் அடித்தது.
இந்த நிலையில், இரண்டாவது பாடலான ’மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு’ பாடல் வெளியாகியுள்ளது. நிவாஸ் கே பிரசன்னா இசையில், சுப்லாஷ்னி இப்பாடலைப் பாடியுள்ளார்.