நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் குறித்து அப்டேட் வெளியாவதில் தொடர் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா என்கிற வரிசையே நீண்ட காலமாக இருக்கிறது. இதில், உச்ச நட்சத்திரம் என்கிற அடையாளத்துடன் விஜய் ஜன நாயகன் திரைப்படத்துடன் சினிமாவைவிட்டு விலகுகிறார்.
நடிகர் அஜித் குமார் நடிப்பதுடன் கார் பந்தயத்திலும் முழு கவனம் செலுத்தி வருவதால், சினிமாவில் நடித்தே ஆக வேண்டும் என்கிற எந்தக் காட்டாயத்திலும் அவர் இருப்பதாகத் தெரியவில்லை.
இந்த இருவரை ஒப்பிட, நடிகர் சூர்யா தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு என இந்தாண்டு மூன்று வெளியீடுகளைக் காண உள்ளார்.
இறுதியாக, சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா, ரெட்ரோ ஆகிய திரைப்படங்கள் சரியான வணிகத்தையும் வரவேற்பையும் பெறாததால் தற்போது நடித்து முடித்துள்ள கருப்பு திரைப்படத்திற்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
ஆனால், இன்னும் இப்படத்திற்கான ஓடிடி பேச்சுவார்த்தைகள் முடிவடையாததால் திரையரங்க வெளியீட்டுத் தேதி உறுதி செய்யப்படவில்லை.
அதனால், படத்தின் புதிய பாடல்களோ, மற்ற அறிவிப்புகளோ வரமால் இருக்கிறது. தற்போது, புத்தாண்டு போஸ்டர் மட்டும் வெளியாகியுள்ளது. முழுப்படமும் முடிந்தும் சூர்யாவுக்கே வெளியீடு பிரச்னை வந்திருப்பது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.