செய்திகள்

துரந்தர் படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள் நீக்கம்!

துரந்தர் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய வசனம் மற்றும் வார்த்தைகள் நீக்கப்பட்டது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

உலகளவில் மாபெரும் வெற்றியடைந்துள்ள “துரந்தர்” திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய வார்த்தைகள் இடம்பெற்ற வசனங்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது..

இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நாயகனாக நடித்து கடந்த டிச.5 ஆம் தேதி வெளியான திரைப்படம் “துரந்தர்”.

பாகிஸ்தானில் இயங்கும் பயங்கரவாதக் குழுவுக்குள் ஊடுறுவிய இந்திய உளவாளியின் கதையாக உருவாகிய இப்படம் உலகளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்கள் சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால், அக்‌ஷய் கண்ணா, மாதவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் 2 ஆம் பாகம் வரும் மார்ச் மாதம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “துரந்தர்” திரைப்படத்தில் இருந்து “பலூச்” மற்றும் “இன்டெலிஜென்ஸ்” போன்ற வார்த்தைகள் அடங்கிய வசனங்கள் குறிப்பிட்ட சமுதாய மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்துவதாக எழுந்த புகார்களத் தொடர்ந்து அந்த வசனங்களை நீக்கியுள்ளதாக, படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

படக்குழுவின் இந்த முடிவில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் தலையீடு இல்லை எனவும், ஒளிப்பதிவு சட்டத்தின் 31 ஆவது விதியின் கீழ் இந்த நடவடிக்கையைப் படக்குழு மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்தியாவின் யூனியன் பிரதேசமான லடாக்கில், துரந்தர் திரைப்படத்துக்கு இன்று (ஜன. 2) முதல் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 22 காசுகள் சரிந்து ரூ.90.20 ஆக நிறைவு!

பராசக்தி படத்திற்கு தடை விதிக்க மறுப்பு

டி20 உலகக் கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு.. ஸ்டப்ஸ், ரிக்கல்டான் அதிரடி நீக்கம்!

ஒருநாள், டி20 தொடர்களுக்காக வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!

ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருது விழா! சந்திரசேகரகம்பாராவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

SCROLL FOR NEXT