ஜிவி பிரகாஷ், சிவகார்த்திகேயன் 
செய்திகள்

பராசக்தி டிரைலர் வெடிக்கும்: ஜிவி பிரகாஷ்

பராசக்தி குறித்து ஜிவி பிரகாஷ்...

இணையதளச் செய்திப் பிரிவு

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பராசக்தி டிரைலர் குறித்து பேசியுள்ளார்.

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடிப்பில் உருவான பராசக்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது நடைபெற்று வருகிறது.

இதில், படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டு அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், இப்படம் குறித்து பேசிய இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், “பராசக்தி என் 100-வது திரைப்படம். என் முதல் படத்தை இயக்குநர் ஷங்கர் தயாரித்தார். 50-வது படத்தில் நடிகர் விஜய்க்கு இசையமைத்தேன். 100-வது திரைப்படமாக நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ளேன். முதல் படத்தில் பாடல் எழுதியிருந்தேன். தற்போது, 100-வது படத்திலும் எழுதியுள்ளேன்.

இந்த 20 ஆண்டுகளில் 100 திரைப்படங்களுக்கு இசையமைத்ததற்கு உறுதுணையாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி. பராசக்தியின் டிரைலரை பதுக்கி, பதுக்கி வைத்திருக்கிறோம். அது வெளியாகும்போது வெடிக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

பாண்டிய நாட்டுப் பிரதானிகள்

SCROLL FOR NEXT