ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த புன்னப்றா அப்பச்சன் காலமானார்.
மலையாள சினிமாவில் பல நட்சத்திரங்களுடன் கடந்த 56 ஆண்டுகளாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் புன்னப்றா அப்பச்சன் (77).
1970-ல் ஒத்தனிண்டே மகன் என்கிற திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமான அப்பச்சன் நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரங்களில் என மலையாள சினிமாவின் 6 தசாப்த வளர்ச்சியைக் கண்டவர்.
இறுதியாக, சாலக்குடிகாரன் சங்கதி என்கிற திரைப்படத்தில் நடித்தார்.
இந்த நிலையில், உடல்நல பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த புன்னப்பாற அப்பச்சன் ஆலப்புழையில் காலமானார். நடிகராக மட்டுமல்லாது எல்ஐசி ஏஜெண்டாகவும் பணியாற்றியவர், தமிழில் சுறா திரைப்படத்தில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
actor punnapra appachan dies
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.