நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் விருது அளித்த இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தனது சொந்த மண்ணில் இளையராஜாவிடம் விருது பெற்றதுக்கு மிகுந்த நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
தெலுங்கில் வளர்ந்துவரும் நடிகையாக இருக்கும் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தமிழில் காந்தா திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார்.
நடிப்பாற்றலுடன் கூடிய அழகான தோற்றத்தால் தமிழ், தெலுங்கு திரைத்துறையில் பல படங்களில் வாய்ப்பைப் பெற்று வருகிறார்.
தமிழில் வெளியான காந்தா படத்திலும் அவரது நடிப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில். தனது இன்ஸ்டா பக்கத்தில் இளையாராஜாவுடனான புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
டியர் இளையராஜா சார், எனது சொந்த மண்ணான சத்ரபதி சம்பாஜிநகரில் நடைபெற்ற அஜந்தா எல்லோரா திரைப்பட விழாவில் உங்களிடம் இருந்து விருது வென்றதை மிகவும் கௌரமாகக் கருதுகிறேன்.
உங்கள் ஆசிர்வாதத்துடன் எனது பயணத்தைத் தொடங்குவதில் மிகுந்த கருணையாக உணர்கிறேன்.
அழகான கௌரவம் மற்றும் மரத்வாடாவின் மகளான என்னை இவ்வளவு கொண்டாடியதிற்கு ஏஐஎஃப்எஃப்-க்கு மிக்க நன்றி.
கருணைமிக்க வார்த்தைகளுக்காக ரசூல்பூக்குட்டி சாருக்கும் நன்றிகள். இந்தப் பயணத்தை மறக்க முடியாத ஞாபகமாக்கிய சந்திரகாந்த் குல்கர்னி அவர்களுக்கும் சிறப்பான நன்றிகள் எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.