முகப்பு
செய்திகள்

பென்ஸ் திரைப்படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு நிறைவு!

பென்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து...

Updated On : 8 ஜூலை 2026, 5:06 pm IST
நடிகர்கள் ரவி மோகன், ராகவா லாரன்ஸ், நிவின் பாலி
பகிர்:

நடிகர்கள் ராகவா லாரன்ஸ், ரவி மோகன் நடிக்கும் பென்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் நிறைவடைந்துள்ளதாம்.

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பென்ஸ் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தில் நாயகனாக ராகவா லாரன்ஸும் வில்லனாக நிவின் பாலியும் நடித்து வருகின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் ரவி மோகனும் இணைந்துள்ளார்.

மேலும், எல்சியூ எனப்படும் லோகேஷ் கனகராஜ் திரைப்பட கதைகளுடன் இணைப்பை ஏற்படுத்தும் படமாகவே பென்ஸ் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு லியோ படப்பிடிப்பு நடைபெற்ற செட்டில் படமாக்கப்பட்டதுடன் அடுத்தடுத்த முக்கிய காட்சிகள் செட் அமைக்கப்பட்டு எடுக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் நிறைவடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படப்பிடிப்பு தொடங்கி ஓராண்டுக்கு மேலாகியும் இடைவெளி விட்டு எடுத்து வருவதால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

It is reported that 50 percent of the filming for the movie Benz, starring Raghava Lawrence and Ravi Mohan, has been completed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments