முகப்பு
செய்திகள்

சுந்தர். சி திரைப்படத்துக்காக உடல் எடையைக் குறைத்த விஷால்!

புருஷன் திரைப்படத்துக்காக உடல் எடையைக் குறைத்த விஷால்...

Updated On : 2 மார்ச் 2026, 5:25 pm IST
விஷால்
பகிர்:

நடிகர் விஷால் உடல் எடையைக் குறைத்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு “புருஷன்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கிறார்.

ஆம்பள, ஆக்‌ஷன் ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து மூவரின் கூட்டணி இணைந்துள்ள இந்தப் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Advertisement

Advertisement

ஆக்‌ஷன் கலந்த நகைச்சுவைக் கதைக்களத்துடன் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர்கள் தமன்னா, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இப்படத்திற்காக விஷால் தன் உடல் எடையைக் கணிசமாகக் குறைத்துள்ளார். இதற்கான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.

summary

actor vishal reduce his weight for purushan movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.