வைரலாகும் நடிகர் ராம் சரண் பாதுகாவலர் கெவின் குண்டா! யார் இவர்?
நடிகர் ராம் சரணின் பாதுகாவலர் குறித்து...
நடிகர் ராம் சரண் பாதுகாவலர் சமூக வலைதளங்களில் வைராகியுள்ளார்.
தெலுங்கு சினிமாவின் நட்சத்திர நடிகரான ராம் சரணுக்கு தென்னிந்தியளவில் ரசிகர்கள் உள்ளனர். இறுதியாக அவர் நடித்த கேம் சேஞ்சர் கலவையான விமர்சனங்களைப் பெற்று வணிக ரீதியான தோல்வியைச் சந்தித்தது.
தற்போது, இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் பெத்தியில் நடித்து முடித்துள்ளார். இப்படம் நாளை (ஜூன் 4) வெளியாகிறது. இதற்கான புரமோஷன்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நேற்று (ஜூன் 2) விஜயவாடாவில் நடைபெற்ற படத்தின் நிகழ்வில் ராம் சரண், ஜான்வி கபூர் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது, திடீரென ரசிகர் ஒருவர் ராம் சரணை நோக்கி விரைவாக வந்தார். இதனைக் கவனித்த ராம் சரண் பாதுகாவலர் ஒரே ஆளாக அந்த நபரைத் தூக்கிச் சென்று வெளியே விட்டார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலானதுடன் அந்த பாதுகாவலர் குறித்து கேள்விகளும் எழுந்துள்ளன.
நடிகர் ராம் சரணின் முக்கிய பாதுகாப்பு அதிகாரியாக இருப்பவர் பெயர் கெவின் குண்டா. சர்வதேச குத்துச்சண்டை வீரர் ஆவார். காம்பியா நாட்டைச் சேர்ந்த கெவின் தற்போது இத்தாலியில் வசிப்பதாகக் கூறப்படுகிறது. பெத்தி திரைப்படத்திற்காக ராம் சரண் தன் தனிப்பட்ட பாதுகாவலராக கெவினை நியமித்துள்ளார். இவரின் சம்பளம் நாளொன்றுக்கு ரூ. 2 லட்சம் என செய்திகளில் வெளியாகியுள்ளன. ஆனால், அவ்வளவு தொகை இருக்காது என்றும் கூறப்படுகிறது.
பிரபல நடிகர்கள் தங்களுக்குப் பாதுகாவலர்களை நியமித்துக்கொள்வது சாதாரணம்தான் என்றாலும் ராம் சரண் வெளிநாட்டு குத்துச்சண்டை வீரரை வைத்திருப்பது வித்தியாசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.