முகப்பு
செய்திகள்

துரந்தர் 2 படத்தின் டிரைலர் தேதி..! 4 மணி நேர படமாக வெளியாகிறதா?

நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ள துரந்தர் 2 படத்தின் டிரைலர் குறித்து...

Updated On : 6 மார்ச் 2026, 3:20 pm IST
துரந்தர் 2 படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / ஜியோ ஹாட்ஸ்டார்.
பகிர்:

நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ள துரந்தர் 2 (துரந்தர் தி ரிவென்ச்) படத்தின் டிரைலர் நாளை (மார்ச் 7) காலை 11.01 மணிக்கு வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் மார்ச் 19ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ஆதித்யா தார் இயக்கத்தில் உருவான துரந்தர் திரைப்படம் உலகமெங்கும் சுமார் ரூ.1,300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியது.

Advertisement

Advertisement

பாகிஸ்தானுக்கு உளவாளியாகச் செல்லும் ரன்வீர் சிங் கதாபாத்திரம், அதில் வில்லனாக நடித்த அக்‌ஷய் கண்ணாவுக்கும் சமூக வலைதளத்தில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.

இந்தியா - பாகிஸ்தான் அரசியல் ரீதியாக விமர்சனங்களை எதிர்கொண்ட இந்தப் படம் வலதுசாரி மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

சாரா அர்ஜுன், மாதவன், சஞ்சய் தத், ரவி ராம்பால் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். துரந்தர் படத்தின் முதல் பாகம் 3 மணி நேரம் 34 நிமிஷம் கொண்டதாக உருவாகியிருந்தது.

இந்நிலையில், இதன் இரண்டாம் பாகம் 4 மணி நேரம் இருக்குமென தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குநரின் தைரியமான முயற்சிக்கு பாராட்டுகள் வந்தாலும் அதிகமாக முயற்சிக்கிறாரோ என்ற விமர்சனங்களும் எழுகின்றன.

summary

The trailer of actor Ranveer Singh's Durandhar 2 (Durandhar The Revenge) will be released tomorrow (March 7) at 11.01 am, the film's team has announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments