ரன்வீர் சிங் பாலிவுட்டில் நடிக்கத் தடை?
நடிகர் ரன்வீர் சிங் திரைப்படங்களில் நடிக்க பாலிவுட் திரைப்பட அமைப்பு தடை விதித்துள்ளது.
நடிகர் ரன்வீர் சிங் திரைப்படங்களில் நடிக்க பாலிவுட் திரைப்பட அமைப்பு தடை விதித்துள்ளது.
பாலிவுட் முன்னணி இயக்குநர் ஃபர்ஹான் அக்தர் இயக்கவிருந்த டான் 3 திரைப்படத்தில் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
பல கோடிகள் செலவில் முன் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 10 நாள்களில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், திடீரென நடிகர் ரன்வீர் சிங் படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் திரைப்படம் 2 பாகங்களாக வெளியாகி இந்திய திரைப்பட வரலாற்றில் பெரிய வசூல் சாதனையைப் படைத்தது. இதனைத் தொடர்ந்து, ரன்வீர் சிங்கின் சம்பளமும் உயர்ந்தது.
இந்த நிலையில், டான் 3 படத்தில் துரந்தர் படத்தைப் போலவே வன்முறைக் காட்சிகள் வைக்குமாறும் கதையில் சில மாற்றங்களைச் செய்யுமாறும் ரன்வீர் சிங் தரப்பு தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி ரன்வீர் சிங் முன்னர் பேசிய சம்பளத்தை விட அதிகமாகக் கேட்டதாகவும், லாபப் பகிர்வு, அதீத நிபந்தனைகள் மற்றும் பட்ஜெட் ரீதியாக தயாரிப்பு தரப்புடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும் கூறப்படும் நிலையில் படத்திலிருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனால், படத்தின் இயக்குநர் ஃபர்ஹான் அக்தர், தயாரிப்பாளர் மற்றும் ரன்வீர் சிங் இடையே பிரச்னை வெடித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, படக்குழுத் தரப்பில் கடந்த வாரம் அளித்த புகாரின் பேரில் பாலிவுட் திரைப்பட அமைப்பான 'ஃபெடரேஷன் ஆஃப் வெஸ்டர்ன் இந்தியா சினி எம்ப்ளாயீஸ்’ அமைப்பு ரன்வீர் சிங்கிற்கு தடை விதித்துள்ளது.
இதன்படி, பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ரன்வீர் சிங்குடன் இணைந்து பணியாற்றக் கூடாது என்று அந்த அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
Is Ranveer Singh Banned from Acting in Bollywood?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.