ஆலியா பட்டின் ஆல்ஃபா பட முதல் நாள் வசூல்!
பாலிவுட் நடிகை ஆலியா பட் நாயகியாக நடித்து வெளியான ஆல்ஃபா திரைப்படத்தின் முதல் நாள் வசூல்...
பாலிவுட் நடிகை ஆலியா பட் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து வெளியான “ஆல்ஃபா” திரைப்படத்தின் முதல் நாள் வசூல் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான ஆலியா பட் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து வெளியான புதிய படம் “ஆல்ஃபா”. ஸ்பை ஆக்ஷன் கதைகளத்துடன் உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் ஷிவ் ரவைல் இயக்கியுள்ளார்.
இத்துடன், யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் ஷார்வரி, அனில் கபூர், பாபி டியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், பிரபல நடிகர் ஹிருத்திக் ரோஷன் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான “ஆல்ஃபா” திரைப்படம் முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ. 17.42 கோடி வசூலித்துள்ளதாக இன்று (ஜூலை 4) படக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், ஹிந்தி மட்டுமின்றி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
The first-day box office collection of the film "Alpha," starring Bollywood actress Alia Bhatt in the lead role, has been announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.