செல்வாக்கு மிக்க 100 இந்தியர்கள்: ஆலியா பட், நயன்தாரா, குகேஷ், சூர்யவன்ஷிக்கு இடம்!
டைம் இதழ் வெளியிட்டுள்ள இந்தியாவின் முக்கியமான 100 நபர்களின் பட்டியல் குறித்து...
அமெரிக்க நிறுவனமான டைம் இதழ் இந்தியாவின் முக்கியமான 100 நபர்களின் பட்டியல் வெளியிட்டுள்ளது. முதல்முறையாக இந்த மாதிரியான 100 இந்தியர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன.
’டைம்100 நெக்ஸ்ட் இந்தியா - TIME100 Next India’ என்ற பெயரில் முதல்முறையாக 100 செல்வாக்கு மிக்க இந்தியர்களின் பட்டியல் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.
இந்தப் பட்டியலில் சினிமா, விளையாட்டி, அறிவியல், தலைமைப் பண்பு, தொழிலாளர்களில் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.
Advertisement
Advertisement
இந்த இந்தழில் ஆலியா பட் முகப்புப் படமாக வைக்கப்பட்டுள்ளார். மேலும் இவர்களுடன் ஆர்யன் கான், கபாடியா, அனிருத் ரவிச்சந்தர், தில்ஜித், சூர்யவன்ஷி, குகேஷ் என பலரும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
குறிப்பாக சினிமா திரையில் சமந்தா, சாய் பல்லவி, இஷான் கட்டர், நயன்தாரா, பார்வதி திருவோத்து, பா. ரஞ்சித் தேர்வாகியுள்ளார்கள்.
இசைத் துறையில் இருந்து அறிவு, அனிருத், தில்ஜித், இஷான் கோஷ், ஜஸ்லீப் ரோயல், பிரதீக் குந்த் ஆகியோர் தேர்வாகியுள்ளார்கள்.
இந்த இதழ் வரும் டிச.12ஆம் தேதி மும்பையில் காலாவில் அறிமுகமாக இருக்கிறது. பாலிவுட் நடிகை ஆலியா பட் இந்தப் பட்டியலில் சிறப்பிடம் பெறுகிறார். இவர் டைம்ஸ் இதழிலும் பலமுறை இடம்பெற்று அசத்தியுள்ளார்.