காந்தாரா சர்ச்சை! சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்!
காந்தாரா மிமிக்ரி விவாகரத்தில் மன்னிப்பு கோரிய ரன்வீர்...
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்குச் சென்று தன் மன்னிப்பைக் கேட்டுள்ளார்.
ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் திரைப்படம் 2 பாகங்களாக வெளியாகி இந்திய திரைப்பட வரலாற்றில் பெரிய வசூல் சாதனையைப் படைத்தது. இதனைத் தொடர்ந்து, ரன்வீர் சிங்சின் சம்பளமும் உயர்ந்தது. தற்போது, டான் - 3 படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இதற்கு முன், நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளியான காந்தாரா திரைப்படத்தைப் புகழ்ந்து பேசிய ரன்வீர், மேடையிலேயே தெய்வகோலா நடனடத்தை மிமிக்ரி செய்தார். இது தெய்வ நிந்தனை போல் இருந்ததால் இதனைக் கண்ட ரிஷப் ஷெட்டி, இதைச் செய்யக்கூடாது எனச் சுட்டிக்காட்டினார்.
Advertisement
Advertisement
தொடர்ந்து, சமூக வலைதளங்களில் வைரலான அந்த விடியோவால் ரன்வீருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன. முக்கியமாக, நீதிமன்றத்தில் மத நம்பிக்கையைப் புண்படுத்தியதாக ரன்வீர் மீது வழக்கும் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, கர்நாடகத்திலுள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் மன்னிப்பு கேட்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில், பொதுவெளியில் தன் மன்னிப்பைக் கோரிய ரன்வீர் தற்போது மைசூரிலுள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு நேரடியாக வந்து தன் மன்னிப்பைக் கேட்டுள்ளார். ரன்வீர் சிங் கோவிலுக்கு வந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
Bollywood actor Ranveer Singh visited the Chamundeshwari Amman Temple
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.