விஜய் ஆண்டனி - சசி கூட்டணியில் நூறு சாமி..! முதல்பார்வை போஸ்டர் அப்டேட்!
இயக்குநர் சசியின் படத்தின் நடிகர் விஜய் ஆண்டனி மீண்டும் நடித்துள்ள புதிய படம் குறித்து...
இயக்குநர் சசியுடன் நடிகர் விஜய் ஆண்டனி மீண்டும் இணைந்து நூறுசாமி எனும் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் நாளை (மார்ச்.16) வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய் ஆண்டனியும் இயக்குநர் சசியும் இணைந்து கடந்த 2016ல் பிச்சைக்காரன் படம் வெளியானது. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இந்தப் படத்துக்குப் பிறகு, 10 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்துள்ளார்கள்.
நூறுசாமி எனும் படத்தினை விஜய் ஆண்டணியே தயாரித்து நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் நடிகைகள் ஸ்வாசிகா, லிஜோமோல் நடித்துள்ளார்கள். இவர்களுடன் கருணாஸ், பாலாஜி சக்திவேல் நடித்துள்ளார்கள்.
இந்தப் படம் கோடையை முன்னிட்டு மே 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது. கடந்த செப்டம்பரில் அறிவிக்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாகக் கூறப்படுகிறது.
இயக்குநர் சசியும் விஜய் ஆண்டனியும் மீண்டும் இணைந்துள்ளதால், ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.