தயாரிப்பாளர் கே. ராஜன் தற்கொலைக்கு என்ன காரணம்?
கே. ராஜன் மறைவு குறித்து...
தயாரிப்பாளர் கே. ராஜன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திரையுலகினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தயாரிப்பாளர் கே. ராஜன் 1983 ஆம் ஆண்டு பிரம்மச்சாரிகள் படத்தை தயாரித்து தமிழ் சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்கினார். தொடர்ந்து, அவள் பாவம், நினைக்காத நாளில்லை உள்ளிட்டப் படங்களைத் தயாரித்து கவனம் பெற்றவர் பல திரைப்படங்களுக்கு விநியோகிஸ்தராகவும் செயல்பட்டார்.
நடிகர் சரத்குமார் - நிழல்கள் ரவி நடித்த நம்ம ஊரு மாரியம்மா, உணர்ச்சிகள் ஆகிய படங்களை இயக்கியவர். பல ஆண்டுகளாகத் திரைத்துறையில் இயங்கி வந்த கே. ராஜன் நேற்று (மே 17) சென்னை அடையாறு கூவத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. கடன் தொல்லையால் இந்த விபரீத முடிவை எடுத்ததாக சில தகவல்கள் வெளியாகின.
Advertisement
Advertisement
ஆனால், அவருக்கு கடன் பிரச்னை ஏதும் இல்லை என பிரபல தயாரிப்பாளர் ஏ. எல். அழகப்பன் கூறியுள்ளார். மேலும், “கே. ராஜன் வசதியாகத்தான் இருந்தார். கடன் பிரச்னைகள் இருக்க வாய்ப்பில்லை. காரணம், அவர் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். ஆனால், குடும்ப ரீதியான மன வருத்தத்தில் இருந்தார். முக்கியமாக, கடந்த ஓராண்டாக தனியார் விடுதியில் தங்கியிருப்பதாகவும் மகள் வீட்டிலிருந்து உணவு வந்துவிடும் என்று சொன்னார். ஏன் இந்த முடிவை எடுத்தார் எனப் புரியவில்லை” எனக் கூறியுள்ளார்.
தயாரிப்பாளர் கே. ராஜனின் மகன் பிரபு நடிகர் ஆர்ஜே பாலாஜியின் எல்கேஜி திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
The incident of Producer K. Rajan committing suicide has caused shock among the film fraternity.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.