நீட்: தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க பிரதமருக்கு சிஜேபி கடிதம்!
நீட்தேர்வு முறைகேடுகள் காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கக் கோரி பிரதமருக்கு கரப்பான்பூச்சி கட்சித்தலைவர் கடிதம் எழுதியது பற்றி...
நீட்தேர்வு முறைகேடுகள் காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கக் கோரி, பிரதமருக்கு கரப்பான்பூச்சி மக்கள் கட்சித்தலைவர் (சிஜேபி) அபிஜீத் தீப்கே வெள்ளிக்கிழமை (ஜூன் 19) கடிதம் எழுதியுள்ளார்.
தலைமை நீதிபதி ஒருவரின் விமர்சனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டிஜிட்டல் கிரியேட்டர் அபிஜீத் தீப்கே என்பவரின் தலைமையில் தொடங்கப்பட்டது கரப்பான்பூச்சி மக்கள் கட்சி. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து போராட்டத்தை அறிவித்தனர்.
அதன்படி, நாட்டின் பல பகுதிகளில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினைச் சார்ந்த இளைஞர்கள், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும், நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளைக் கண்டித்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement
இதனிடையே, பல மாநிலங்களில் நீட் மறுதேர்வு அச்சம் காரணமாகவும் நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் காரணமாகவும் மன அழுத்ததுக்கு உள்ளான மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கரப்பான்பூச்சி கட்சித்தலைவர் அபிஜீத் தீப்கே கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:
நமது இளம் மாணவர்களின் உயிருக்கும் மனநலத்திற்கும் அச்சுறுத்தலாக விளங்கும், தீவிரமடைந்து வரும் ஒரு விவகாரத்தை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவரும் நோக்கில், கனத்த இதயத்துடன் இன்று இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
நீட் தேர்வு குளறுபடிகளால் கடந்த சில வாரங்களில் மட்டும் 11 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். அதிலும் குறிப்பாக கடந்த 48 மணி நேரங்களில் 5 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
இவர்களில் பல மணவர்கள் கல்விக்கடன் பெற்றும், அவர்களுடைய குடும்பங்களில் வாழ்நாள் சேமிப்பை செலவு செய்தும் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்தனர். எனவே, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலக வலியுறுத்தி, நாட்டின் பல பகுதிகளில் நாங்கள் போராடி வருகிறோம். மாணவர்களின் இந்த உயிரிழப்புகளுக்கு யாரவது பொறுப்பேற்க வேண்டும் என்பது எங்களின் விருப்பமாக உள்ளது என்று அபிஜீத் தீப்கே குறிப்பிட்டுள்ளார்.
Abhijit Deepke, leader of the 'Cockroach Party', wrote a letter to the Prime Minister on Friday (June 19) demanding compensation of ₹1 crore each for the families of students who died by suicide due to irregularities in the NEET examination.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.