சென்னை தியாகராய நகர், பாண்டி பஜாரில் மறைந்த நடிகர் நாகேஷுக்கு சொந்தமான ஒரு திரையரங்கம் இருந்தது. "நாகேஷ் திரையரங்கம்' என்ற பெயரிலேயே அது இயங்கி வந்தது. 1984-ஆம் ஆண்டு இந்த திரையரங்கை திறந்து வைத்தவர் எம்.ஜி.ஆர். 2008-ஆம் ஆண்டு திருமண மண்டபமாக அது மாறி விட்டது. இந்த திரையரங்கத்தை மையமாக கொண்டு தற்போது "நாகேஷ் திரையரங்கம்' என்ற பெயரில் படம் உருவாகி வருகிறது. "நெடுஞ்சாலை' ஆரி கதாநாயகனாக நடிக்கிறார். சந்தானத்துடன் "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்', "இனிமே இப்படித்தான்' படத்தில் நடித்த ஆஸ்னா சவேரி கதாநாயகியாக நடிக்கிறார். பானுப்ரியா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கின்னஸ் சாதனை படமாக "அகடம்' படத்தை இயக்கிய ஐசக் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.