குறும்பட உலகத்தில் இருந்து மற்றொரு வரவாக கோலிவுட் வருகிறார் இயக்குநர் மார்டின். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இவர் இயக்கி வரும் படம் மாணிக். கதாநாயகனாக மா.கா.பா.ஆனந்த் நடிக்கிறார். கதாநாயகியாக சூஷா குமார் நடிக்கிறார். வத்சன், அருள்தாஸ், அணு, புஜ்ஜி பாபு, சீதா, மதுமிதா, சிவசங்கர், மனோபாலா உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கின்றனர். எப்போதும் எளிய மனிதர்களின் வெற்றிகள்தாம் வரலாறாகி இருக்கின்றன. ஆசிரமத்தில் வளர்ந்த மா.கா.பா.ஆனந்த், வத்சன் இருவரும் பெரிய அளவில் சாதிக்க எண்ணி அங்கிருந்து வெளியேறுகின்றனர். ஆதரவற்ற நிலையில் இந்த சமூக வாழ்க்கைக்குள் வரும் அவர்களின் லட்சியம் என்ன ஆனது? அவர்கள் சாதிக்க நினைத்தது என்ன? எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்ன என்பதை நகைச்சுவையான திரைக்கதை அமைப்பில் சொல்வதுதான் படம். தரண் குமார் இசையமைக்கிறார். எம்.ஆர்.பழனிகுமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கே.எம்.ரியாஸ் படத்தொகுப்பு செய்கிறார். கலையை வினோத் நிர்மாணிக்க, ஆடை வடிவமைப்பை செந்தில்குமார் கவனிக்கிறார். படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. செப்டம்பர் மாத இறுதியில் திரைக்கு வருகிறது இப்படம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.