நியூஸ் ரீல்

'கமல் பத்தி என்ன நினைக்கறீங்க?' நடிகை பூஜா குமார் பேட்டி!

விஸ்வரூபம் 2 படத்தில் அதிக கவனம் ஈர்த்த நடிகை பூஜா குமார் அண்மையில் அளித்த பேட்டி

சினேகா

விஸ்வரூபம் 2 படத்தில் அதிக கவனம் ஈர்த்த நடிகை பூஜா குமார் அண்மையில் அளித்த பேட்டியொன்றில், மேற்சொன்ன கேள்வி கேட்கப்பட்ட போது மனம் திறந்து பேசினார்.

‘கமல் சார் கூட தொடர்ந்து 5 வருருஷமா நடிக்கிறேன். அவர் மிகச் சிறந்த நடிகர் மட்டும் இல்லை, எல்லாவகையிலும் ஒரு உதாரண மனிதர். முக்கியமா, அவரோட தொழில் பக்தி மெய்சிலிர்க்க வைக்கும். ராஜ் கமல் நிறுவனம் எனக்கு சென்னையில் இன்னொரு வீடு மாதிரி. கமலைப் போல ஒரு கடுமையான உழைப்பாளியை பார்க்கிறது கஷ்டம். பன்முகத் திறனாளி அவர். ஒரே சமயத்துல பல வேலைகளை செய்யறது கூட பெரிசு இல்லை, அதுல அத்தனையிலும் சிறப்பா செய்பவர் அவர். அரசியல் சினிமா டிவி ஷோ இப்படி ஒரே சமயத்துல பெரிய விஷயங்களில் இறங்கி எல்லாத்துலயும் திறமையுடன் கையாள்வது சாதாரண விஷயமா என்ன? எனக்கு ஆச்சரியமாகவும் மலைப்பாகவும் இருக்கும். பொறுமையா இருக்கறதுக்கு எப்படின்னு எனக்குக் கத்துக் கொடுத்தவர் கமல் சார்தான். எந்தத் தடை வந்தாலும் அதை எதிர்த்து போராட்டக் குணத்தோட செயல்படுவார். 

சினிமா மேல கமல் சாருக்கு மிகப் பெரிய காதல். நான் கண்கூடா பல சமயம் அதைப் பார்த்திருக்கேன். புதுசா யோசிச்சு புது புது ஐடியாக்களை உருவாக்குவார். சின்ன விஷயத்துக்குக் கூட மிகத் தீவிர மெனக்கிடல் அவர்கிட்ட இருக்கும். எதைப் பத்தியும் பயப்படாம ரிஸ்க் எடுப்பார். ரசிகர்களுக்குப் பிடிக்கும்படியா படம் நேர்த்தியா வரணும் அது ஒண்ணுதான் அவரோட குறிக்கோளா இருக்கும். இப்ப அரசியல் ஈடுபாட்டிலும் சரி, முழு மூச்சா அதுக்காக கடுமையா உழைக்கறார். கமல் சாருக்கு இறை நம்பிக்கை இல்லை ஆனால் இறைவனோட பரிபூர்ண அருள் அவருக்கு இருக்கு. என்னைப் பொருத்தவரையில் கமல் ஒரு மேஜிக் மேன்’ என்று கூறியிருந்தார் பூஜா குமார்.

பூஜா அமெரிக்காவில் வசிப்பதால் அவர் அதிகப் படங்களில் நடிப்பதில்லை. தேர்ந்தெடுத்து சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அது குறித்து அவர் கூறுகையில், ‘நல்ல படங்களில் நடிக்க ஆசைதான். கடந்த வருடம் பிஎஸ்வி கருடா வேகா என்ற தெலுங்கு படத்தில் நடித்தேன். டோலிவுட்டும் பிடித்துவிட்டது. அந்த படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நல்ல வாய்ப்புகள் வந்தால் நிச்சயம் தொடர்ந்து நடிப்பேன்’ என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று ராஜாஜி உத்சவ்: லூட்யன் சிலை அகற்றப்பட்ட இடத்தில் ராஜாஜிக்கு சிலை!

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

SCROLL FOR NEXT