முகப்பு
நியூஸ் ரீல்

எனக்குக் கல்யாணமா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை!

நடிகை தமன்னாவின் தாயார் ராஜானி பாட்டியா மகளுக்கு அமெரிக்க டாக்டர் மாப்பிள்ளையைப் பார்த்துள்ளார்

Updated On : 28 ஜூலை, 2018 at 11:28 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:51 PM

நடிகை தமன்னாவின் தாயார் ரஜனி பாட்டியா மகளுக்கு அமெரிக்க டாக்டர் மாப்பிள்ளையைப் பார்த்துள்ளார் என்றும், அடுத்த ஆண்டு தமன்னாவின் திருமணம் விமரிசையாக நடைபெறும் என்றும் கடந்த வெள்ளிக்கிழமை செய்திகள் வைரலாகின. இந்த வதந்திக்கு நடிகை தமன்னாவின் தரப்பிலிருந்து ஒரு ட்விட்டர் விளக்கம் வெளிவந்து புரளிக்கு முற்றுப் புள்ளி வைத்தது.

'ஒரு நாள் நடிகர், மற்றொரு நாள் க்ரிக்கெட் வீரர். பின்னர் டாக்டர் இப்படித் தொடர்ந்து என் திருமணம் பற்றிய செய்திகள் வெளியானவாறு உள்ளன. என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய இது போன்ற அடிப்படை ஆதரமற்ற தகவல்களை ஏற்றுக் கொள்ள என்னால் முடியாது. காதலிப்பது என்பது ஒரு இன்பகரமான விஷயம் தான். ஆனால் தற்போது சிங்கிளாக இருப்பதில் சந்தோஷமாகவே உள்ளேன். என்னுடைய பெற்றோர் எனக்கு மாப்பிள்ளை வேட்டை எதுவும் செய்யவில்லை. நான் பாட்டுக்கு ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் சமயத்தில், எங்கிருந்துதான் இத்தகைய வதந்தியை பரப்புகிறார்களோ? நான் என்னுடைய வேலையைத் தான் காதலிக்கிறேன். எனது திருமணம் பற்றி நிச்சயம் அனைவரிடமும் கூறுவேன். இது போன்ற வதந்திகளைப் பரப்பாதீர்கள். என்னுடைய பெயரிடப்பட்ட திருமண அட்டை இன்னும் தயாராகவில்லை, நானும் கூட எனவே யாருடைய கற்பனையிலிருந்தோ உதித்த இந்த கிசுகிசுக்களுக்கு நான் பொறுப்பல்ல என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்’ என விளக்கம் தந்திருந்தது தமன்னாவின் ட்விட்டர் பதிவு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.