நியூஸ் ரீல்

ரசிகரின் கன்னத்தில் அறைந்தாரா சல்மான் கான்! வைரலான விடியோ பதிவு!

பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் ‘பாரத்’என்ற படம் ரம்ஸான் அன்று வெளியானது.

சினேகா

பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் ‘பாரத்’என்ற படம் ரம்ஸான் அன்று வெளியானது. இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி மும்பையில் உள்ள ஒரு திரையரங்கில் வெளியிடப்பட்டிருந்தது. அதைக் காண சல்மான் கான் வந்தார். அவரைப் பார்க்க ரசிகர் கூட்டம் சூழ, சல்மான் கானின் பாதுகாவலர்கள் அவர்களை விலக்கி வழி அமைத்துத் தந்தனர். இந்த நேரத்தில் சல்மான் கானை பார்க்க முயன்ற ஒரு குழந்தை ரசிகரிகரிம் பாதுகாவலர் அநாகரிகமாக நடந்து கொள்ளவே, அதைப் பார்த்து கோபமடைந்த சல்மான் யாரும் எதிர்பாராத வகையில் அந்த பாதுகாவலர் கன்னத்தில் அறைந்துவிட்டார். 

ரசிகர் ஒருவர் இந்தக் காட்சியை தனது செல்ஃபோனில் பதிவு செய்திருக்கவே, இது சமூக வலைத்தளங்களில் வெளியாக வைரலாகிவிட்டது. சல்மான் கான் செய்தது சரியென்றும், என்னதான் இருந்தாலும் ஒருவரை பொதுவெளியில் ஓங்கி கன்னத்தில் அடித்தது தவறென்றும் இருதரப்பு வாதங்கள் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT