2017-ஆம் ஆண்டு வெளியான 'காபில்' என்ற படத்தில் யாமி கவுதமும், ரித்திக் ரோஷனும் கண் பார்வையற்ற காதலர்களாக நடித்திருந்தனர். அண்மையில் இந்தப் படம் பீஜிங் நகரத்தில் திரையிடப்பட்டபோது அதன் புரமோஷனுக்காக யாமி கவுதமும், ரித்திக் ரோஷனும் சீனா சென்றிருந்தனர்.
அப்போது யாமி கவுதமுக்கு பாரம்பரிய போர்வை ஒன்றை பிரபல நடிகர் ஜாக்கிசான் பரிசாக அனுப்பியிருந்தார். 'சிறுவயது முதலே ஜாக்கிசான் ரசிகையான நான், அவர் இந்தியா வந்த போது, சந்திக்க முடியாமற் போய்விட்டது. இப்போது நான் பீஜிங்கில் இருப்பதை அறிந்து இந்த நினைவு பரிசை அவர் அனுப்பியது என்னை நெகிழ வைத்தது. விரைவில் அவரை சந்திக்க ஆவலாக இருக்கிறேன்' என்று கூறியுள்ளார் யாமி கவுதம்.
- அருண்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.