நியூஸ் ரீல்

குறும்படத்தில் நடித்துள்ள பிரபல நடிகை!

பாலிவுட் முன்னாள் கனவுக்கன்னி ஹேமாமாலினியின் மகள் ஈஷா தியோல் திரைப்படங்களில் நடிப்பது அரிது

DIN

பாலிவுட் முன்னாள் கனவுக் கன்னி ஹேமாமாலினியின் மகள் ஈஷா தியோல் திரைப்படங்களில் நடிப்பது அரிது என்றாலும், முதல் மகன் ரத்யா பிறந்தவுடன் 'கேக்வாக்' என்ற குறும்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். கொல்கத்தா ஓட்டல் ஒன்றில் பணிபுரியும் பெண் ஒருத்தி, நஷ்டத்தில் இயங்கும் ஓட்டலை மீட்டெடுக்க புதிய உணவு பண்டமொன்றை தயாரித்து எப்படி வெற்றிப் பெறுகிறாள் என்பதுதான் கதை. ஈஷா நடித்து முடித்துள்ள இந்த குறும்படம், தற்போது அவர் இரண்டாவது பிரசவத்தை எதிர்பார்க்கும் நேரத்தில் வெளியாக இருப்பதால், பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் ஈஷாவும் அவரது கணவர் பரத் தக்கானியும்.

**

ஏற்கெனவே 'மாணிக்யா', 'விஸ்மயா' ஆகிய கன்னட படங்களில் நடித்துள்ள வரலட்சுமி சரத்குமார், மீண்டும் கன்னடம், தெலுங்கு மொழிகளில் உருவாகும் 'ரணம்' என்ற படத்தில் சிபிஐ பெண் அதிகாரி வேடம் ஏற்றுள்ளார். இவருடன் புரட்சியாளராக சேத்தன் மற்றும் என் கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக சிரஞ்சீவி சர்ஜா ஆகியோரும் நடிக்கின்றனர். வரலட்சுமி பங்கேற்ற சண்டை காட்சிகள் சமீபத்தில் தொடர்ந்து 9 நாள்கள் படமாக்கப்பட்டன. இது வரலட்சுமி நடிக்கும் மூன்றாவது கன்னடப் படமாகும்.

**

திருமணத்திற்குப் பின் ரண்வீர் கபூருடன் இணைந்த தன் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வரவேற்பை அள்ளிய தீபிகா படுகோன், சமீபத்தில் தன்னுடைய அம்மா உஜாலாவுடன் இணைந்த புகைப்படத்தை, அவரை சிரிக்க வைக்க முயற்சிக்கிறேன். "அத்தனை இயற்கையானது அவரது சிரிப்பு' என்ற தலைப்பில் தீபிகா தன் இணையத்தில் வெளியிட்ட 8 மணி நேரத்திற்குள் 1-6 மில்லியன் லைக்ஸ் மற்றும் 5 ஆயிரம் காமென்ட்ûஸ பெற்றிருக்கிறார்.

அது மட்டுமின்றி தீபிகா திருமணத்தின்போது எதிர்பாராமல் வந்து கட்டியணைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய கேத்ரினா கைய்ப், தீபிகா - உஜாலா புகைப்படத்தைப் பார்த்து, "உன்னுடைய அம்மாவின் சிரிப்பு உண்மையிலேயே அழகு'' என பாராட்டியது தீபிகாவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிறிஸ்தவா்கள் படுகொலையை தடுக்காவிட்டால் ராணுவ நடவடிக்கை: நைஜீரியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு: புதிய தலைவா் டிஜெ. ஸ்ரீனிவாசராஜ்

உதவிப் பேராசிரியரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம்: பச்சையப்பன் கல்லூரி வரலாற்றுத் துறை தலைவா் இடைநீக்கம்

பெரு நிறுவனங்களால் இயக்கப்படுகிறாா் பிரதமா் மோடி: ராகுல் குற்றச்சாட்டு

ஜேனிஸ் ஜென் சாம்பியன்!

SCROLL FOR NEXT