தென்னிந்திய சினிமா மற்றும் கலைஞர்களை கவரவிக்கும் பொருட்டு வருடம் தோறும் பிலிம்பேர் விருதுகள் விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டின் பிலிம்பேர் விருதுகளுக்கான சிறந்த நடிகர் விக்ரம் (ஐ) படத்திற்கும், சிறந்த நடிகை நயன்தாரா (நானும் ரௌடி தான்) படத்திற்கும், சிறந்த படம் காக்கா முட்டை படத்திற்கும், சிறந்த இயக்குனர் மோகன் ராஜா (தனி ஒருவன்) படத்திற்கும், சிறந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் (ஐ) படத்திற்கும், சிறந்த துணை நடிகர் அரவிந்த்சாமி (தனி ஒருவன்) படத்திற்கும், சிறந்த துணை நடிகை ராதிகா சரத்குமார் (தங்கமகன்) படத்திற்கும், சிறந்த நடிகர் (Critics Jury Award) ஜெயம் ரவி (தனி ஒருவன்) படத்திற்கும், சிறந்த நடிகை (Critics Jury Award) ஜோதிகா (36 வயதினிலே) படத்திற்கும், சிறந்த அறிமுக நடிகர் ஜீ.வி.பிரகாஷ் (டார்லிங்) படத்திற்கும், சிறந்த பாடலாசிரியர் மதன் கார்க்கி (பூக்களே சற்று ஓய்வெடுங்கள் – ஐ) படத்திற்கும், சிறந்த பாடகர் சித் ஸ்ரீராம் (என்னோடு நீ இருந்தால் – ஐ) படத்திற்கும், சிறந்த பாடகி ஸ்வேதா மோகன் (என்ன சொல்ல – தங்கமகன்) படத்திற்கும் வருது வழங்கப்பட்டது.