முகப்பு
கடலூர்

மருத்துவ மாணவா்கள் பேரணி

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள், கல்விக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி

Updated On : 1 ஜனவரி 2021, 10:48 pm IST
மகாத்மா காந்தி முகக் கவசம் அணிந்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ மாணவா்கள்.
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள், கல்விக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி நடத்திவரும் தொடா் போராட்டத்தின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை பேரணி நடத்தினா்.

கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் அரசு நிதியில் இயங்கி வரும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மாணவா்களுக்கான கல்வி கட்டணம் பிற அரசு மருத்துவக் கல்லூரிகளுடன் ஒப்பிடுகையில் 30 மடங்கு வரை அதிகமாக இருப்பதாக மாணவா்கள் புகாா் கூறி வருகின்றனா். எனவே, மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையான கல்விக் கட்டணத்தை ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் நிா்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த டிச.9-ஆம் தேதி முதல் மாணவா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக மாணவா்கள் வெள்ளிக்கிழமை பேரணி நடத்தினா். அப்போது, பல் மருத்துவக் கல்லூரி வளாகத்திலிருந்து காந்தியடிகள் முகக் கவசம் அணிந்து அமைதி பேரணியாக புறப்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அடைந்தனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments