வீட்டு வேலைக்கும் பொருளாதார மதிப்புண்டு
அயல்நாட்டு அறிஞர் ஒருவர் கூறுகிறார் மனைவியும் கணவனும் மாறி மாறி பிள்ளை பெறுவார்கள் என்று இருந்தால், மூன்றாவது குழந்தைக்கு மேல் எந்த தம்பதியும் பெற்றுக்கொள்ள மாட்டார்கள். எந்த ஆணும் அந்த பாரத்தை தெரிந்து இன்னொரு முறை ஏற்றுக் கொள்ளமாட்டான் என்று.
அயல்நாட்டு அறிஞர் ஒருவர் கூறுகிறார் மனைவியும் கணவனும் மாறி மாறி பிள்ளை பெறுவார்கள் என்று இருந்தால், மூன்றாவது குழந்தைக்கு மேல் எந்த தம்பதியும் பெற்றுக்கொள்ள மாட்டார்கள். எந்த ஆணும் அந்த பாரத்தை தெரிந்து இன்னொரு முறை ஏற்றுக் கொள்ளமாட்டான் என்று.
எழுத்தாளர் ஆர். சூடாமணியின் "டாக்டரம்மாவின் அறை' சிறுகதையை படியுங்கள். மனைவிக்கு பிள்ளைப்பெற்று பிள்ளைப்பெற்று உடல் நலிந்துபோகிறது. திரும்பவும் கர்ப்பம். இது கர்ப்பம் இல்லை ஏதோ நோய் என்று டாக்டரம்மா கூறமாட்டாரா என்றுகூட வேண்டிக் கொள்கிறாள். ஆனால் கர்ப்பம்தான். டாக்டரம்மா மனைவியின் உடல் நலம் கருதி இம்முறை கருத்தடை சிகிச்சை செய்துவிடலாம் என்று அறிவுறுத்துகிறார். கணவன் மறுத்துவிடுகிறான்.
இருவரும் வீடு திரும்புகிறார்கள். அவன் கையில் பளுவான ஒரு கூடை. வீடு வந்ததும் அதை கீழே அகற்றி "அப்பா என்ன கனம்' என்று சலித்துகொள்கிறான். அப்பொழுது மனைவி முகத்தில் ஒரு புன்னகை அந்த புன்னகை ஒரு கவிதை என்று கதை முடியும்.
Advertisement
முந்தி தவங்கிடந்து முன்னூறு நாள் தொந்தி சரிய தங்கள் குழந்தையைச் சுமந்ததற்கு கணவன் மனைவிக்கு எவ்விதம் கைம்மாறு செய்யமுடியும்? அதற்கு பொருளாதார மதிப்பு உண்டா? பிள்ளைப்பேறு மட்டுமல்ல, ஒரு பெண் வீட்டில் செய்யும் வேலைக்கு என்ன மதிப்பு?
"என் மனைவியை வேலைக்கு செல்ல நான் அனுப்புவதில்லை சார் வீட்டில் தான்' என்று சொல்லுபவர்கள் தங்கள் இல்லத்தரசிகள் செய்யும் வேலையை சற்று யோசித்து பார்க்க வேண்டும். மன்னிக்கவும் இல்லத்தரசிகள் மட்டும் என்றல்ல, எல்லா பெண்களுமே பெண்கள் செய்யும் வேலைக்கு பொருளாதார மதிப்பு கணித்தோமானால் நம் மொத்த உள்நாட்டு விளைபொருளின் மதிப்பு கூரையை பிய்த்துக்கொண்டு எகிறும். எஈட - இது ஒரு வருடத்தில் விளையும் தயாராகும் பொருள்கள் மற்றும் பணிகளும் மதிப்பு.
ஒருவர் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வந்த பொழுது "சோர்வாக இருக்கிறது சற்று குழந்தையை பார்த்துகொள்ளுங்கள்' என்று அவரிடம் மனைவி சொன்னாராம். அதற்கு கணவர் "நான் வேலை செய்து விட்டு வருகிறேன் வீட்டில் இருந்த உங்களுக்கு என்ன சோர்வு' என்றாராம். "சரி ஒரு சவாலாக நான் வீட்டில் இருந்து செய்வதை நீங்கள் ஒரு நாள் செய்யுங்கள் என்றும் நீங்கள் வேலைக்கு செல்வது போல் அன்று நான் 9 மணிக்கு வெளியே போய் வருவேன்' என்று மனைவி சொல்ல கணவனும் ஒப்புக்கொள்ள (பாவம் அறியாமை), வீட்டில் "முதல்வன்' திரைப்படம் நடந்தேறியது.
காலையில் எழுந்து சமையல் அறை வேலை, பள்ளி செல்லும் பெண்ணுக்கு நோட்டு புத்தகம் சரியாக உள்ளதா என்று பார்த்து, மதிய உணவு எடுத்துவைத்து பள்ளிக்கூட பேருந்தில் ஏற்றி விட்டு, வீட்டில் ஜுரத்துடன் படுத்திருக்கும் அம்மாவுக்கு (மனைவியின் மாமியார்) மருந்து கொடுத்து, வெந்நீர் எடுத்து வைத்து.. 9 மணிக்கு வெளியே செல்லும் மனைவிக்கு டிபன் கொடுத்து.. பாத்திரங்கள் கழுவி, துணி துவைத்து, ஒரு வயது குழந்தையை குளிப்பாட்டி, உணவு ஊட்டி, தூங்க வைத்து... மதியம் 1 மணிக்குள்ளேயே நம் கதாநாயகருக்கு நுரை தள்ளுகிறது. மனைவி நல்லவள். என்ன நடக்கும் என்று தெரியும். பள்ளிக்கு சென்ற பெண் திரும்பு முன் சீக்கிரமே வீடு வந்துவிடுகிறார். கணவரும் நல்லவர்தான் இல்லாவிடில் சவாலை ஒப்புக்கொண்டிருக்கமாட்டார். இது கற்பனையாக இருக்கலாம். நான் எங்கோ படித்தது, ஆனால் உண்மை தான் இல்லையா?
வீட்டு வேலைக்கு என்ன பொருளாதார மதிப்பு என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பில் சொல்லப்பட்டது. நேஷனல் இன்ஷ்யூரன்ஸ் எதிர் மைனர் தீபிகா என்ற வழக்கு (2009) 6 ஙகஒ 1005 இதில் இந்த மதிப்பு எப்படி கணக்கிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு வந்த சில மாதங்களில் அருண் குமார் அகர்வால் எதிர் நேஷனல் இன்ஸ்யூரன்ஸ் என்ற வழக்கில் அழ்ன்ய் ஓன்ம்ஹழ் அஞ்ஹழ்ஜ்ஹப் ஹய்க் ஹய்ர்ற்ட்ங்ழ் ஸ். சஹற்ண்ர்ய்ஹப் ஐய்ள்ன்ழ்ஹய்ஸ்ரீங் இர்ம்ல்ஹய்ஹ் ஹய்க் ஞற்ட்ங்ழ்ள் 2010 (7) நஇஇ 304.,உச்ச நீதி மன்றம், மைனர் தீபிகா தீர்ப்பின் அணுகுமுறை சரிதான் என்று கூறியது.
தீபிகா என்ற சிறுமியின் தாய் தந்தையர் ஒரு விபத்தில் இறந்தார்கள். அதில் தாயை இழந்ததற்கு காப்பீட்டு கழகம் எப்படி ஈடு செய்ய வேண்டும் என்று ஆராய்ந்து நான்கு வழிமுறைகளை சுட்டி காட்டியது இந்த தீர்ப்பு.
ஒன்று - கணவனின் வருமானத்தில் சரி பாதி என்று பங்காளி முறை.
இரண்டு - எந்த வாய்ப்பை மறுத்து மனைவி வீட்டில் தங்கினார் என்று பார்க்கலாம். அந்த வருமானத்தின் அடிப்படையில் கணக்கிடலாம். உ-ம் அவர் பேராசிரியர் வேலையை விட்டு விட்டு இல்லத்தரசியாக இருக்கிறார் என்றால், அவர் பேராசிரியர் பணியில் என்ன வருவாய் ஈட்டியிருப்பார் என்று கணக்கிடலாம்.
மூன்று - மனைவி செய்யும் பணிகளை செய்ய வெளி மனிதருக்கு என்ன சம்பளம் கொடுப்போம் என்று கணக்கிடலாம் உ-ம் சமையல் வேலை, பாடம் கற்று கொடுப்பது, வீட்டு நிர்வாகம், நோயாளிகளை பார்த்துகொள்வது முதலியன.
நான்கு - அவர் வீட்டில் இருப்பதனால் கணவர் எவ்வளவு தூரம் பொருளாதார வளர்ச்சி அடைந்தார்.
இந்த நான்கு வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றை பின்பற்றி அந்த இல்லத்தரசியின் பணிக்கு பொருளாதார மதிப்பிடலாம்.
இதெல்லாம் ஒரு கோடிகாட்டுதல்தான். இந்த பணிகள் அனைத்திலும் அவள் அன்பு கலந்திருக்கும். அன்புக்கு என்ன விலை கொடுக்க முடியும்? ஓ, அவள் வேலைக்கு மதிப்பீடு தந்தோமானால் எவ்வளவு கொடுக்கவேண்டும் என்று ஒவ்வொருவரும் யோசித்தால் போதும்.
சுந்தரம்மாள் எதிர் சுந்தர மகாலிங்க நாடார் என்று ஒரு அரிய தீர்ப்பு 1979இல் வந்தது. நீதியரசர் சத்தியதேவ் அவர்களின் பரந்த நோக்கிற்கு சாட்சியாக நிற்கும் தீர்ப்பு.
ஒரு பெண் என்ன என்ன கனவுடனும் எதிர்பார்ப்புகளுடனும் ஒருவனை மணக்கிறாள்? அவை சிதைந்து போனால் அவளுக்கு எவ்வாறு ஜீவனாம்சம் கணக்கிட வேண்டும் என்று அந்த தீர்ப்பு கூறும். அந்த தீர்ப்பை படிக்க வேண்டும். உடனே எல்லோரும் விவாக ரத்து செய்ய வேண்டும் என்று நான் கூறுகிறேன் என்று நினைக்கக் கூடாது. சரியாக புரிந்து கொள்ளவேண்டும். பெண்களின் மதிப்பு என்ன நிலை என்ன என்று அறிந்துகொள்ளலாம்.
ஒரு பக்கம் நம் நாட்டில் கொற்றவை என்றும், பேச்சி என்றும், காளி என்றும் பெண்ணை வணங்குகிறோம். ஆனால் மறு பக்கம் நம் நாட்டில் பெண்களுக்கு எங்கேயும் பாதுகாப்பு இல்லையோ என்று அச்சப்பட வேண்டியுள்ளது.
இந்த நிலை மாற பெண்ணை மதிக்க வீட்டில் எல்லோருக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும். அதற்கு முதலில் பெண் வீட்டில் வேலை செய்வதை குறிப்பிடுகையில் அவங்க சும்மா தான் இருக்காங்க என்று சொல்வதை நிறுத்தவேண்டும்.
பெண்களுக்கு எதிரான அனைத்து வேற்றுமைப்படுத்தும் நிலைபாடுகளையும் ஒழிப்பதற்கான பன்னாட்டு உடன்படிக்கையின் (இர்ய்ஸ்ங்ய்ற்ண்ர்ய் ர்ய் உப்ண்ம்ண்ய்ஹற்ண்ர்ய் ர்ச் ஈண்ள்ஸ்ரீழ்ண்ம்ண்ய்ஹற்ண்ர்ய் அஞ்ஹண்ய்ள்ற் ரர்ம்ங்ய்) பரிந்துரை 17 விலைமதிப்பிடாது பெண் செய்யும் பணிகளைப்பற்றியது.
வீட்டு வேலையின் மதிப்பை கணக்கிட்டால்தான் நடைமுறையில் பெண்களின் உண்மையான பொருளாதார பங்கு வெளியாகும் என்று கூறுகிறது.
சம்பளம் பெறாது பணிகளை செய்பவர்கள் பெரும்பாலும் பெண்கள்தான் என்று ஐ.நா ஆய்வுகள் கூறுகின்றன. இந்த வேலைதான் மனித அனுபவங்களின் முக்கிய ஊற்று என்று மசஐஇஉஊ அமைப்பு
கூறுகிறது.
அந்த முக்கிய ஊற்றை வறண்டு போகாமல் காலம் காலமாய் காத்து வரும் பெண்கள் என்ன எதிர்பார்கிறார்கள் தெரியுமா?
பெண்களை போற்றுதும் என்று வாயால் சொன்னால் மட்டும் போதாது. மனதால், செயலால் உணர்வுகளால் தங்களை மதிக்க வேண்டும் என்றும், சமமாக சக மனுஷியாக கருத வேண்டும் என்றும்தான்.
கட்டுரையாளர்: உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு)