கட்டுரைகள்

சிறுதொழிலும் மூலதனமும்

அண்மையில் நாடாளுமன்றத்தில், நிதி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளில் குறிப்பிடத்தக்கது, புதிய தொழில் துவங்கத் தேவையான ஊக்க மூலதனத்துக்கான நிதி ஒதுக்கீடாகும்.

எஸ். ராமன்

அண்மையில் நாடாளுமன்றத்தில், நிதி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளில் குறிப்பிடத்தக்கது, புதிய தொழில் துவங்கத் தேவையான ஊக்க மூலதனத்துக்கான நிதி ஒதுக்கீடாகும். புதிதாக தொழில் துவங்குபவர்களை (உய்ற்ழ்ங்ல்ழ்ங்ய்ங்ன்ழ்ள்) ஊக்குவிக்கும் பொருட்டு, மூலதன நிதியாக, பட்ஜெட்டில் 10,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியுடன், முக்கியமான ஒரு சமூக நல கருத்தும் அதன் பின்னணியில் பொதிந்திருப்பதை கவனிக்க வேண்டும்.

படித்த இளைஞர்களிடையே வேலைவாய்ப்புப் பிரச்னை தலை தூக்கி நிற்கிறது. இந்தப் பிரச்னையை அப்படியே வளரவிட்டால், இளைஞர்களிடையே ஏமாற்றமும், விரக்தியும் மேலோங்கி, வரும் காலங்களில் அவர்களை பல சமூக விரோத செயல்களில் ஈடுபடுத்தும் சூழ்நிலை உருவாவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இது நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய ஒன்றாகும்.

இளைஞர்களின் எண்ணங்களையும் முயற்சிகளையும் வளர்ந்து வரும் சுயதொழில் வாய்ப்புகளை நோக்கி திசை திருப்பினால், தனிப்பட்ட முறையில் மட்டுமல்லாது, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் அது பயனுள்ளதாக அமையும்.

படித்த இளைஞர்களில் பலர், வேலைவாய்ப்புகளுக்கு அரசாங்கம் மற்றும் தனியார் அமைப்புகளையே சார்ந்திருக்கின்றனர். தற்போது நிலவி வரும் கடுமையான போட்டி சூழ்நிலையில், குறைந்த ஊதியத்தில் கடுமையான பணிகளை செய்து வேலையில்லாதவர்கள் என்ற அவப்பெயரை போக்கிக்கொள்ள அவர்கள் முற்படுகின்றனர். படிப்பிற்கு ஏற்ற பணியும், ஊதியமும் அமையாமல், அவர்களில் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

ஆனால், இவர்களில் ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு பிரத்யேகத் திறமையும் சாதிக்க வேண்டும் என்ற வெறியும் புதைந்து கிடக்கிறது. அவர்களின் எண்ணங்களை செயல்வடிவமாக மாற்றுவதற்குத் தடையாக நிற்பது, அதற்குத் தேவையான மன உந்துதலும், பண மூலதனமும்தான். சுயதொழில் துவங்குவதற்கானத் தகுதி பற்றிய தவறான அபிப்ராயங்களும் பலருக்கு தடைக் கற்களாக நிற்கின்றன.

சுயதொழில் துவங்குவதற்குத் தொழிற்கல்வி பயின்றிருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. தொழிற்கல்வி பயிலாத திருபாய் அம்பானியால் ஒரு மாபெரும் தொழில் சாம்ராஜ்யத்தையே உருவாக்க முடிந்தது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

ஆரம்ப காலங்களில் அவரிடம் இருந்தது தன்னம்பிக்கை என்ற மூலதனம் மட்டும்தான். பிற்காலத்தில், பெரும் தொழில் அதிபராக உருவெடுக்க, அதை அவர் ஏணிப்படியாகப் பயன்படுத்தினார்.

சுயதொழில் திறமை என்பது பரம்பரை குணாதிசயம் என்ற கருத்து பரவலாக நிலவி வருகிறது. அந்த எண்ணம் முதலில் களைந்தெரியப்பட வேண்டும்.

சில வருடங்களுக்கு முன்பு, கோவில் அர்ச்சகரின் மகன் ஒருவர் என்னிடம் ஆலோசனை கேட்டு வந்தார். பிளஸ் 2 பாஸ் செய்திருந்த அவர், வேலை கிடைக்காததால், சுயதொழில் செய்ய முடிவு செய்திருந்தார். அதற்கான வங்கிக் கடன் உதவிக்கு என்னை பரிந்துரைக்கும்படி கேட்டார்.

எனக்கு தெரிந்த வங்கி மானேஜரிடம் அவரை அறிமுகம் செய்து வைத்தேன். அட்டைப் பெட்டி செய்வதற்கான இயந்திரங்கள் வாங்குவதற்கு வங்கியில் கடன் பெற்று, தொழிலில் இறங்கி, பல ஏற்றத் தாழ்வுகளை சந்தித்து முன்னுக்கு வந்தார்.

தற்போது, அவர் பெரிய தொழில் அதிபராகி, மற்ற இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்வதாக கேள்விப்பட்டு மகிழ்ந்தேன். என்னை அவர் சந்தித்தபோது, தன்னம்பிக்கையும், சந்தை தேவைகளை ஆழ்ந்து ஆராயும் திறமை மட்டும்தான் அவருடைய மூலதனங்களாக இருந்தன,

இஸ்ரேல் போன்ற நாடுகளில், சுயதொழில் எண்ணம், சிறு வயது முதல், மாணவர்களின் மனதில் பதிந்து வளரும்படி பள்ளிக் கல்வி பாடத்திட்டங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தொழில் தோல்விகளைச் சந்திக்கும் திறமையும் அப்பொழுதே வளர்க்கப்படுகிறது.

இளைஞர்களிடையே இம்மாதிரி எண்ண வளர்ப்புகள்தான், சுய தொழில் வளர்ச்சிக்கான முக்கிய மூலதனமாகும். நம் பள்ளிப் பாடத்திட்டங்கள், தொழில் முனைவோர்களை உருவாக்கும் விதமாக மாற்றி அமைக்கப்படவேண்டியது அவசியம். சுயதொழில் பற்றிய எதிர்மறை எண்ணங்கள் பள்ளிப் பருவத்திலேயே திருத்தி அமைக்கப்பட வேண்டும்.

சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை துவக்கி வெற்றிகரமாக நடத்துவதற்கு நம் நாட்டில் ஏராளமான வாய்ப்புகள் பரவிக் கிடக்கின்றன. இம்மாதிரி நிறுவனங்கள்தான், பெரும் தொழில் நிறுவனங்களின் 40 சதவீத உற்பத்தித் தேவையை பூர்த்தி செய்து கொடுக்கின்றன.

பன்னாட்டு, உள்நாட்டு தொழில் நிறுவனங்கள், காலணி முதல் கார் வரையிலான தங்கள் தயாரிப்புப் பணிகளின் ஒரு பகுதியை, சிறுதொழில் நிறுவனங்களிடம்தான் ஒப்படைக்கின்றன. சிறு தொழில் நிறுவனங்கள் அம்மாதிரிப் பெரும் தொழில் நிறுவனங்களுக்காக தயாரிக்கும் பொருள்களின் எண்ணிக்கை எண்ணில் அடங்காது..

சமீபத்திய ஆய்வின்படி, இந்திய உள்நாட்டுத் தொழில் உற்பத்தி மதிப்பில் (ஜி.டி.பி.), சிறு தொழில்களின் பங்கு சுமார் 28 சதவீதம். இது மூன்றாண்டுகளில் 40 சதவீதமாக வளரும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்தியப் பொருளாதாரம் மேலும் வளர்ச்சி அடையும்போது, சிறு தொழில்களின் வாய்ப்பு எல்லைகள் மேலும் விரிவடையும்.

ஆகையால், சிறு தொழில் நிறுவனங்களுக்கான தேவை நம் நாட்டில் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. அவ்வாய்ப்புகளை இளைஞர்கள், தங்களுக்குச் சாதகமாக, சரிவரப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,

சந்தைத் தேவைகளை கணித்தறிந்து வாய்ப்புகளை பயன்படுத்தும் திறமை, இடர்பாடுகளை (ஆன்ள்ண்ய்ங்ள்ள் ழ்ண்ள்ந்ள்) கண்டு அஞ்சாத மன நிலை, திட்டமிட்ட செயல்பாடுகள் ஆகியவைதான் தொழில் முனைவோருக்கு தேவையான அடிப்படை குண நலன்களாகும்.

ஏற்கெனவே ஓரளவு அறிந்த பயிற்சியின் மூலம் நுண்ணறிவை மேம்படுத்திக்கொள்ளக்கூடிய உற்பத்தித் துறையை தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியமாகும். உற்பத்தி செய்யப்படும் பொருளின் தர மேம்பாடு அல்லது புதிய பொருள் கண்டுபிடிப்பு ஆகியவை, புதிதாக சிறு தொழில் துவங்குபவர்களுக்கு பலன் தரக்கூடிய செயல்பாடுகளாகும்.

எளிதில் கையாளக்கூடிய தயாரிப்புப் பொருளை தேர்ந்தெடுத்துவிட்டாலே, ஐம்பது சதவீத வெற்றி நமக்கு வந்துவிட்டதாகக் கருதலாம்.

சொந்தப் பணம், வங்கிக் கடன் மற்றும் ஊக்க மூலதனம் (யங்ய்ற்ன்ழ்ங் ஸ்ரீஹல்ண்ற்ஹப்) ஆகியவை மூலம் தொழில் துவங்கத் தேவையான மூலதனத்தைத் திரட்டலாம். சொந்தப் பணம் என்றால், நிர்வாகத்தில் வெளியாரின் தலையீடுகளைத் தவிர்க்கலாம். டெல் கம்ப்யூட்டர், ஃபேஸ் புக் ஆகிய நிறுவனங்கள் முற்றிலும் சொந்த முதலீட்டிலேயே துவங்கப்பட்டவையாகும்.

நவீனத் தொழில் நுட்பக் கருவிகள் போன்ற சந்தைக்கு புதிதான சில சாதனங்களின் தயாரிப்பில், சிறு தொழில் நிறுவனங்கள் ஈடுபடும்பொழுது, வங்கிக் கடன் எளிதில் கிடைப்பதில்லை.

புதிய யோசனைகள் தொழில் ரீதியாக பலன் அளிக்கும் வரை, அவைகளின் உற்பத்திக்கு மூலதன உதவி கிடைப்பது சற்று சிரமம்தான். அம்மாதிரிச் சூழ்நிலையில், தயங்காமல் ரிஸ்க் எடுக்க முனையும் மையங்கள் யங்ய்ற்ன்ழ்ங் இஹல்ண்ற்ஹப்ண்ள்ற்ள் என்று அழைக்கப்படுகின்றன.

மற்றவர்கள் மூலதனம் அளிக்கத் தயங்கும் நிறுவனங்களுக்குத் தேவையான ஆரம்ப மூலதனத்தை (நற்ஹழ்ற் ன்ல் ஸ்ரீஹல்ண்ற்ஹப்) இந்த மையங்கள், ஆழ்ந்த ஆராய்ச்சிக்கு (ஈன்ங் க்ங்ப்ண்ஞ்ங்ய்ஸ்ரீங்) பிறகு, வழங்க முன்

வருகின்றன.

அதற்குப் பிரதிபலனாக, நிர்வாகத்தில் பங்கு (ஙஹய்ஹஞ்ங்ம்ங்ய்ற் ஸ்ரீர்ய்ற்ழ்ர்ப்) மூலதனப் பங்கு (உவ்ன்ண்ற்ஹ்) மற்றும் கடன் பத்திரங்கள் (ஈங்க்ஷங்ய்ற்ன்ழ்ங்ள்) ஆகியவைகளை பெற்றுக்கொள்கின்றன.

கடன் பெற்ற தொழில் நிறுவனங்கள் வளர்ந்தவுடன், கடன் வழங்கிய மையங்கள் அந்தப் பங்குகளை நல்ல விலைக்கு விற்று, நிறுவனத்தை விட்டு வெளியேறி விடும்.

இந்தியாவில், செபி அமைப்பில் பதிவு செய்யப்பட்ட இம்மாதிரி மூலதன மையங்களின் எண்ணிக்கை சுமார் 180 ஆகும். டாடா, பிர்லா, டி.வி.எஸ். குழுமங்கள் உள்பட பல பிரபல தொழில் நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் ஊக்க மூலதன மையங்களும் இதில் அடங்கும்.

"பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய தொழில்களுக்கான ஊக்க மூலதன ஒதுக்கீடு, தொழில் முனைவோருக்கு நேரடியாக வழங்கப்பட மாட்டாது. ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்திய, பன்னாட்டு மையங்கள் மூலமாக அவை தொழில் முனைவோரைச் சென்றடையும்' என்று மத்திய அரசின் வங்கித்துறை செயலாளர் விளக்கமளித்திருக்கிறார்.

வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைத்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வல்லமை படைத்த சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறை முயற்சிகளை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் இத்தகையச் செயல்பாடுகள் நிச்சயம் வரவேற்கத்தக்கவையாகும்.

கட்டுரையாளர்: வங்கி அதிகாரி (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு!

#t20wc | இலங்கை bowling எப்படி இருக்கு? | T20 World Cup Review | #SLvsENG

#t20 | இலங்கை Batting எப்படி இருக்கு? | T20 World Cup2026 Review | #SLvsENG |

தில்லி: வீட்டில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றபோது சிலிண்டர் வெடித்து 13 பேர் காயம்

7 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற அமரன்!

SCROLL FOR NEXT