முகப்பு
கட்டுரைகள்

ஜாகிர் நாயக் ஒரு நச்சுச் செடி

கேரளாவில் இருந்து சென்று ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்துள்ள கேரள இளைஞர்கள், இந்தியாவின் மிகப் பிரபலமான வஹாபிஸப் போதகர் ஜாகிர் நாயக்குடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்கள் என்கிறது இந்திய உளவுத் துறை. வங்கதேசத்தில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், ஜாகிர் நாயக்கின் போதனைகளால் கவரப்பட்டுள்ளனர் என்கிறது வங்கதேசக் காவல் துறை.

Updated On : 18 ஜூலை, 2016 at 1:26 AM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:14 PM

கேரளாவில் இருந்து சென்று ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்துள்ள கேரள இளைஞர்கள், இந்தியாவின் மிகப் பிரபலமான வஹாபிஸப் போதகர் ஜாகிர் நாயக்குடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்கள் என்கிறது இந்திய உளவுத் துறை. வங்கதேசத்தில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், ஜாகிர் நாயக்கின் போதனைகளால் கவரப்பட்டுள்ளனர் என்கிறது வங்கதேசக் காவல் துறை.

பாகிஸ்தானில் பிரபல சூபி பாடகர் அம்ஜத் சப்ரியை சுட்டுக் கொன்றவர்கள் ஜாகிர் நாயக்கின் ரசிகர்கள் என்கிறது பாகிஸ்தான் காவல் துறை.

ஜாகிர் நாயக் தன்னுடைய "பீஸ்' (Peace) தொலைக்காட்சியில் பைபிளில் கற்பழிப்பது எப்படி என்பதும் கூட்டுக் கற்பழிப்பை எப்படி செய்ய வேண்டும் என்பதும் விளக்கப்பட்டுள்ளது; கடவுளின் பார்வையில், இஸ்லாம் மட்டுமே உண்மையான மதமாகும், ஏனைய மதங்களை நாம் அனுமதிக்கக் கூடாது; மனைவியை அடிப்பதில் தவறேதும் இல்லை; கல்லால் அடித்துக் கொல்லும் முறையில் தவறேதும் இல்லை; பெண்களை பள்ளிக்கு செல்ல அனுமதிக்கக் கூடாது; அவர்கள் அங்கே தங்களது கன்னித் தன்மையை இழக்கிறார்கள்; பெண்கள் படிக்கும் பள்ளிகள், கல்லூரிகளை இழுத்து மூட வேண்டும் என்பன போன்ற கருத்துகளை தொடர்ந்து பரப்பி வருகிறார்.

Advertisement

நூற்றாண்டுகளாக, இந்தியாவில் உறவினர்கள் போல வாழ்ந்து வரும் இந்துக்கள் - முஸ்லிம்கள் இடையே வெறுப்பை விதைப்பதைக் கனகச்சிதமாக செய்து வருகிறார் ஜாகிர் நாயக். இதனால் இவரை "விஷத்தைப் பரப்புபவர்' என விவரித்திருந்தார் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.

கென்யாவில் பல்கலைக்கழக மாணவர்களிடையே பேசிய மோடி, ஜாகிர் நாயக்கை "வெறுப்பின் போதகர்' எனக் கூறினார்.

ஜாகிர் நாயக்கின் பரப்புரைகளை ஒளிபரப்பும், "பீஸ்' தொலைக்காட்சியை இந்தியா 2012-ஆம் ஆண்டு தடை செய்தது. இப்போது வங்க தேசம் தடை செய்து விட்டது. ஆனாலும், இந்தியாவில், கேபிள் டி.வி ஆபரேட்டர்களின் துணையுடன் இது இன்னமும் ஒளி பரப்பப்படுகிறது.

முஸ்லிம் அல்லாத மற்ற மதத்தினர்கள் மீதான வெறுப்பை அவர் நியாயப்படுத்துகிறார். இஸ்லாத்தை பின்பற்றுபவர்கள் மட்டுமே உண்மையானவர்கள் என்கிறார். சில வரட்டு நியாயங்களைச் சொல்லி, பயங்கரவாதத்தை நியாயப்படுத்துகிறார்.

இவர் மற்றைய மதங்களை மட்டும் பழிக்கவில்லை, இஸ்லாத்தின் ஏனைய பிரிவுகளையும் நிராகரிக்கிறார். சூபி முஸ்லிம்களை, கல்லறைகளைத் தொழுபவர்கள் என்றவர், ஷியா முஸ்லிம்கள் இஸ்லாமியர்களே இல்லை என்கிறார்.

ஏனைய மதங்களின் மேல் அவர் காட்டும் வன்மத்தைவிட, இஸ்லாத்தின் ஏனைய பிரிவுகள் மீது அவர் காட்டும் வன்மம் அதிகமானது.

"பாமியன் புத்த சிலைகளை உடைத்ததன் மூலமாக புத்த மதத்தினருக்கு தலிபான்கள் அறிவூட்டியுள்ளனர். ஏனென்றால், கௌதம புத்தர் என்றுமே தனக்கு சிலை வைக்கச் சொன்னதில்லை' என தலிபான் பயங்கரவாதிகளால், பாமியன் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவத்தை நியாயப்படுத்தினார் ஜாகிர் நாயக்.

உலகெங்கும் உள்ள புத்த மதத்தினரின் உணர்வுகளை இந்த சம்பவம் பாதிக்காதா எனப் பத்திரிகையாளர் ஒருவர் கேட்டபோது, "இந்திய அரசு கோடிக்கணக்கான பெறுமதியுள்ள போதைப் பொருள்களை கைப்பற்றி அழித்தால், அது மில்லியன் கணக்கான போதைப்பொருள் உபயோகிப்பாளர்களையும், வியாபாரிகளையும் பாதிக்கவே செய்யும். அதற்காக போதைப் பொருட்களை அழிக்காமல் இருக்க முடியுமா' என அந்த புத்தர் சிலைகளை, போதைப் பொருட்களுடன் ஒப்பிட்டுப் பேசினார் ஜாகிர் நாயக்.

ஐ.எஸ். பயங்கரவாதிகள் தங்களது ஆளுகைக்குக் கீழுள்ள பிரதேசங்களில் உள்ள தர்காக்களை, மாற்று மதத்தினரின் கோவில்களை எல்லாம் ஷிர்க் என்ற பெயரில் அழித்து வருகின்றனர். சிரியாவில் உள்ள ஏராளமான தர்காக்களை அழித்து வரும், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் இவருக்கும் இடையில் தொடர்பு இருப்பது போலத் தோன்றுகிறது.

ஜாகிர் நாயக், தலிபான்கள், ஐ.எஸ். பயங்கரவாதிகள், அல் } காய்தா, போஹோ ஹரம் போன்ற அபாயங்கள் அனைத்தின் அடிப்படை வஹாபிஸம்.

இஸ்லாத்தில் உள்ள பிரிவுகளில் ஒன்றான இது, மிகக் கடுமையான, பழமைவாதத்தில் ஊறிய மதப் பிரிவாக கருதப்படுகிறது. வஹாபிகள், காரணங்களை விடக் கதைகளிலேயே அதிக நம்பிக்கை கொண்டவர்கள். இவர்கள் இஸ்லாத்தின் ஏனைய பிரிவுகளை ஏற்றுக் கொள்வதில்லை.

"சயன்ஸ் ஆப் இஸ்லாம்' எனப் புகழப்படும் உள்ளொளியை பரப்பும், சூபிசத்தைக் கூட இவர்கள் எதிர்க்கிறார்கள். தடைசெய்ய வேண்டும் என்கிறார்கள். தர்கா வழிபாட்டை எதிர்க்கிறார்கள். தர்காகளை உடைக்க வேண்டும் என்கிறார்கள்.

18-ஆம் நூற்றாண்டை சேர்ந்த மத போதகர் முகமது பின் வகாபி என்பவரால் உருவாக்கப்பட்ட வஹாபிஸம், இபின் தேமியா என்ற 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கடும் மத வெறியரின் கொள்கைகளை தத்தெடுத்துக் கொண்டது.

இஸ்லாத்தின் அனைத்து உள்பிரிவினர் மீதும் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ள வஹாபிகள்தான் உலகளவில் பயங்கரவாதிகளை உருவாக்குகிறார்கள்.

இது உலகளவில் அதிவேகமாகப் பரப்பப்படுகிறது. ஜாகிர் நாயக்கிற்கு சொந்தமான ஐள்ப்ஹம்ண்ஸ்ரீ தங்ள்ங்ஹழ்ஸ்ரீட் ஊர்ன்ய்க்ஹற்ண்ர்ய், இந்தியாவின் மிகச் செல்வந்த இஸ்லாமிய அமைப்பாக விளங்கி வருகிறது.

இப்படிப்பட்ட ஜாகிர் நாயக், சவூதி அரசால் பல தடவை விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் இந்துக்கள் -   முஸ்லிம்கள் இடையேயான சகோதரத்துவத்தை சிதைப்பதுடன் மட்டும் நின்று விடாமல், ஏனைய இஸ்லாமியப் பிரிவுகள் மீதும் வன்முறையை தூண்டப் பார்க்கும் ஜாகிர் நாயக்கின் நடவடிக்கைகள், மனித குலத்தின் மேன்மைக்காக உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டியவை என்பதில் சந்தேகம் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.