முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

வன வேளாண்மையே வாழ்வின் தேவை

புத்தனுக்கு ஞானம் சித்தியானதால், அரசமரம், போதிமரமானது. அப்படிப்பட்ட ஞான மரம் இன்று களவு போய்விட்டது ஞான மரமே களவு போனதால் உலகில் உயிர்க்காற்று குறைந்து போய் புவி வெப்பமாகிறது. ஞான மரத்தை வெட்டிச் சாய்த்துவிட்டு, அஞ்ஞான வளர்ச்சியை நோக்கிச் சென்றால் விளைவு சூனியமே.உலகத்தை இரட்சிக்கப் பிறந்த பிரம்ம நிர்வாணம் இன்று பிரம்ம சூனியமாகக் காட்சி தருவதால், மரங்களையும் வனங்களையும் இரட்சித்து வாழ்வு பெறவேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்பது தமிழ் மறை. தமிழ்மறையில் அறத்துப்பால் ஓதும் போது இல்லறவியல், துறவற இயல், ஊழியல் என்று வள்ளுவம் வகுத்தளித்துள்ளது. சம்ஸ்கிருத வேதத்தில் பாலகம், பிரம்மச்சரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், பரப்பிரும்மம் என்று புருஷார்த்தம் வகுக்கப்பட்டிருக்கிறது.பன்னிரண்டு பிராயம் வரை குழந்தைப் பருவம். பன்னிரண்டு முதல் இருபத்தி நான்கு வரை பிரம்மச்சரியம். கிரகஸ்தம் ஒரு கடுமையான பரீட்சை. அதில் தேறியபின் வானப்பிரஸ்தம். வனவேளாண்மையைச் சொல்லும் போது ஏன் வாழ்வு நெறிகளைப் பேசவேண்டும்?வாழ்வுக்குரிய வனவேளாண்மை கல்வியுடனும் வாழ்வு நெறியுடனும் முற்காலத்தில் தொடர்புடையாதாக இருந்தது. குறிப்பாக அந்தக் காலக் கல்விக்கு குருகுலம் அடிப்படை. இந்தக் காலத்தில் மூன்று வயது நிறையும் முன்பே குழந்தையை எல்.கே.ஜி.யில் சேர்த்து விடுகிறார்கள். துள்ளி விளையாட வேண்டிய பருவம் பள்ளிச்சிறையில் தள்ளப்பட்டு ஆண்டுக்கு ஆண்டு புத்தகச்சுமை முதுகில் கட்டப்படுகிறது.அன்று பன்னிரண்டு வயது வரை அரிச்சுவடி தான். பின்னர் அவன் ஒரு குருவை நாடி குருவிடமிருந்து சங்கீதம், நிருத்தியம், மறை ஓதுவது, அகடவிகடம், அறம், பொருள், இன்பம், வில்வித்தை, ஈட்டி எறிதல், போர்க்கலை, என்று பேசக்கூடிய64 கலைகளில் விருப்பமுடையவற்றைக் கற்கிறான்.பொதுவாக குருகுலவாசம் ஆரண்யங்களில் வாழும் சித்தபுருஷர்களான மகரிஷிகளிடம் அவர்களின் ஆசிரமங்களில் நிகழ்ந்து வந்தது. ஆரண்யம் என்றால் காடு என்று பொருள். குருகுலக் கல்வி முறையில் சிஷ்யர்கள் எந்தக் கலை கற்றாலும் குருவின் ஆசிரமத்தைச் சுற்றியுள்ள வனங்களில் வேளாண்மை செய்வது கட்டாயப்பாடம். இப்படித்தான் வனவேளாண்மையின் பாரம்பரியத்தை உய்த்துணர வேண்டும்.இவ்வாறே கிருகஸ்தம் அதாவது இல்லறம் என்ற நல்லறம் கசந்துவிட்டபின் துறவறம் அல்லது வானப்பிரஸ்தம் தொடர்கிறது. வானப்பிரஸ்தம் என்பது பரம்பொருளை நோக்கி சித்தி பெறும் ஒரு சன்மார்க்கம். விண்ணுலகில் தேவர்களோடு சேர்தல். அதற்குப் பிறவிப் பெருங்கடலை நீந்த வேண்டும். நகருக்கு வெளியே வாசம் செய்யவேண்டும். வனம் இருந்தால் தானே அது முடியும்.இந்தக் காலக் கல்வியோடு அந்தக்காலக்கல்வியை ஒப்பிட்டால் நாம் எந்த அளவுக்கு இயற்கையை மட்டுமல்ல, ஒழுக்கத்தையும் மறந்துவிட்டோம் என்றுபுலனாகிறது. இந்தக் காலக் கல்வியின் நோக்கம் பணம். கல்வி நிறுவனங்களின் நோக்கம் கற்பித்தலைவிட பணம் சம்பாதிப்பதே.மாணவர்கள், ஆசிரியர்கள், நிறுவனர்கள் எல்லோருமே பணத்தையே குறிவைப்பதால் மனித ஒழுக்கம் மறந்து போய்விட்டது. அந்தக்கால குருகுலக் கல்வியின் நோக்கம் விநயம். அதாவது, அடக்கம். அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும் என்கிறார் வள்ளுவர்.விநயம் வந்துவிட்டால் சத்தியம், பக்தி, குருவுக்கும் பெற்றோருக்கும் மரியாதை எல்லாம் தொடர்ந்து வரும். இயற்கையை நேசித்தால் எல்லாம் இயலும். இன்றைய கல்வியில் விநயம் போய் பணமே பிரதானமானதால் வளர்ச்சியைப் பணத்தால் அளவிடுகிறோம்.இயற்கையைப் பணமாகப் பார்த்துப் பழகிவிட்டதால் ஐம்பது வருடம் வளர்ந்த ஒரு மரத்தைப் பார்த்து இதை வெட்டினால் ஐந்து லட்சம் கிடைக்கும் என்று ஒரு அரசு நினைக்கிறது. உடனே டெண்டர் விடுகிறது. அடர்ந்து ஓங்கி வளர்ந்துள்ள இந்தப்பச்சை மரம் வழங்கும் உயிர்க்காற்று எவ்வளவு? இம்மரம் விடும் மூச்சுக்காற்று விண்ணில் எந்த அளவுக்கு ஓசோன் படலமாகி இந்த பூமியின் வெப்பத்தைத் தணிக்கிறது என்றெல்லாம் யோசனை ஏற்படுவது இல்லை.நாம் படித்த படிப்பு இப்படி நம்மை யோசிக்க வைப்பதில்லை. மரங்களை நட்டு, வனங்களை மீட்பதே கல்வியின் பணி. இப்பணியை நாம் எப்படிச் செய்யவேண்டும் இங்கு தான் வனவேளாண்மை அர்த்தமாகிறது.வனவேளாண்மை என்பதைப் பல கண்ணோட்டங்களில் புரிந்து கொண்டு செயல்படுவது நலம்.அடர்த்தியற்ற வனப்பகுதிகளைக் காகிதத் தொழிற்சாலைக்கு ஏலம் விடாமல் அங்கு மரங்களை வளர்த்து அடர்காடுகளாக மாற்றவேண்டும்.அப்பகுதிகளில் மரநடவு செய்யும்போது மரமதிப்பு (பஐஙஆஉத யஅகமஉ) இல்லாத ஆல், அரசு, இலுப்பை, அத்தி, சந்தனவேம்பு, பாலை, காட்டுமா, கோங்கு என்ற செவ்விலவு, நாவல், புன்னை, இச்சி, முள்ளுமுருங்கை, வில்வம், சரக்கொன்றை, வாகை, குல்மோகர் என்ற தீக்கொன்றை, வேம்பு, பனை, சேரான் கொட்டை, புங்கன், மகிழம், ஆத்தி என்ற செம்மந்தாரை, வேங்கை, வாதா, வாதநாராயணன் போன்ற மரங்களைத் தேர்வு செய்வது நலம்.தரிசு நிலமேம்பாட்டுத்திட்ட அடிப்படையில் வருவாய்த்துறைக்குச் சொந்தமான அரசு நிலங்களைப் புறம்போக்கு என்று ஒதுக்கி மனைப்பட்டாவாகமாற்றிக் கொள்ளையடிக்காமல், மேற்கூறிய மரங்களை நட்டு வேளாண் காடுகளைப் புறநகர்ப்பகுதிகளில் உருவாக்க வேண்டும்.மரக்கன்றுகளை நட்டவுடன் பத்தடி உயரும் வரை உயிர்நீர் ஊற்றிக்காப்பாற்ற வேண்டும். அதன் பின் அம்மரம் உயிர்நீரை மண்ணுக்குள் தனக்குத்தானே தேடிக்கொண்டு உயர்ந்துவிடும்.பட்டாநிலங்களும் தரிசாகி வருகின்றன. வறட்சி, வேலைக்கு ஆள் கிடைக்காத நிலை, விவசாயத்தில் ஏற்படும் நஷ்டம், ஆகிய காரணங்களினால் சிலர் நிலத்தை விற்க முற்படுகின்றனர். வேறுசில விவசாயிகள் காகிதத் தொழிற்சாலைகளுடன் ஒப்பந்த அடிப்படையில் யூகலிப்டஸ், சவுக்கு, மூங்கில், மலைவேம்பு மரங்களை சாகுபடி செய்கின்றனர்.இது தவறு அல்ல. அதே சமயம், நீண்டகாலம் வளர்ந்து பலன் தரக்கூடிய குமிழ், மகோகனி, தேக்கு, சந்தனம், செம்மரம் எனப்படும் செஞ்சந்தனம், பூவரசு, ரோஸ்வுட் என்ற தோதகத்தி போன்றவற்றையும் தேர்வு செய்யலாம்.மரங்களுடன் இணைந்த பயிர்விவசாயமும் வனவேளாண்மையின் ஒரு அம்சம். காய்கறி சாகுபடியை அகத்தி முருங்கையுடன் இணைக்கலாம். உங்கள் தோட்டத்திலேயே காடுவளர்ப்பது என்றால் மரங்களை நெருக்கமாக ஏழடி இடை வெளியில் நடலாம். மேட்டுப்பகுதியில் இப்படி நெருக்கமாக மரங்களை நட்டுப் பள்ளப்பகுதியில் காய்கறி, பயிரிடலாம்.காய்கறிப் பயிர்களுக்குரிய கார்பன் தேவையை அதாவது உரத்தேவையை மரங்கள் உதிர்க்கும் இவைகளிலிருந்து பெறவேண்டும். பர்மாகல்ச்சர் (Perma caltune) என்ற பெயரில் ஆஸ்திரேலியாவில் இந்த சாகுபடி முறை பிரபலமாயுள்ளது.கரும்பும் நெல்லும் பயிரிட்டுவந்த எனது நண்பர் ஒருவர் கரும்பு பயிரிட்டு கட்டிங் ஆர்டர் வராமல் கரும்பு காய்ந்து ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட மூன்று ஏக்கர் நிலத்தைவிற்றார். நெல் பயிரிட்ட நஞ்சையைப் புஞ்சையாக்கி மரசாகுபடியில் இறங்கி வெற்றி பெற்றுவருகிறார்.குளத்து வேலைத்திட்டம் காரணமாக அவருக்கு வேலைக்கு ஆள் கிட்டாததால் நஞ்சை நிலம் புஞ்சையானதும் நன்மைக்கே. நூற்றுக்கணக்கில் ரோஸ்வுட் மரம் நீண்டகாலப்பயனுக்கும், குறுகிய காலப்பயனுக்கு, பிளைவுட் தொழிலுக்கு ஏற்ற மலைவேம்பு நூற்றுக் கணக்கில், 40 தென்னைகளுக்கு ஊடுபயிராக பட்டு வளர்ப்புக்குரிய மல்பரிச் செடிகள், வடுமாங்காய் - சென்னைஸ்டார் ஹோட்டல் தேவைக்கு நாட்டு மாமரம் பல. கொய்யா, பப்பாளி நிறைய உண்டு. ஐநூறு அகில் மரங்கள் இயற்கை வழி அகர்பத்திப் பயனுக்கு.இதோடு இவர் விடுவதாயில்லை. வேலிப்பயிராக மூன்று அடி இடைவெளியில் பனங்கொட்டை நட்டுப் பத்தாண்டில் மரமாக்கி நுங்கு விற்பனைக்கும் திட்டமிட்டுள்ளார். பனை நடுவதின் முக்கியப்பயன் நிலத்தடி ஊற்றுவற்றாது என்பது இவர் கருத்து. ஒரு வகைப்பயிர் சாகுபடி என்பது ஒருமைப்பண்பு. இது பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு முராணானது.கால நிலை மாற்றத்தின் பாதிப்புக்கு ஆளாகாமல் காப்பாற்றிக் கொள்ளப் பலவகை மரப்பயிர் சாகுபடிக்கு வழிகாட்டுகிறார். இவர், இரு சால் உழவு மூலம் 34 வகையான சிறுதானியங்களை சாகுபடி செய்து ரூ.52,000 லாபம் பெற்ற சாதனையாளா. இவரைப்போல் பலர் மாவட்டந்தோறும் உதயமாக வேண்டும்.ஆகவே, உலகமக்கள் அனைவரும் மரவளர்ப்பு என்ற கல்வியைக்கற்று வாழ்வுக்காக வனவேளாண்மை செய்து நாட்டைக் காப்பாற்றவேண்டும். வனவேளாண்மையில் புத்தனுக்கு ஞானம் வழங்கிய அரசமரத்தை மறந்து விடாதீர்கள்.அரசமரம் ஒரு ஆக்சிஜன் மரம். ஆலமரமும் பனைமரமும் நீருற்று மரங்கள். மழையின் வித்துக்களாக உள்ள வேறு பல்வகைப்பால் மரங்களும் வாழ்வு தரும் வனவேளாண்மையின் அங்கங்கள்.பால்வடியும் மரங்களை வாழ வைத்தால் மாதம் மும்மாரி பெய்யும் என்பது நம்பிக்கை. வனவேளாண்மைதான் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் புவி வெப்பமாதலைத் தடுக்கும் என்பதால் வனவேளாண்மையே வாழ்வின் தேவை. 

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:45 PM
பகிர்:

புத்தனுக்கு ஞானம் சித்தியானதால், அரசமரம், போதிமரமானது. அப்படிப்பட்ட ஞான மரம் இன்று களவு போய்விட்டது ஞான மரமே களவு போனதால் உலகில் உயிர்க்காற்று குறைந்து போய் புவி வெப்பமாகிறது. ஞான மரத்தை வெட்டிச் சாய்த்துவிட்டு, அஞ்ஞான வளர்ச்சியை நோக்கிச் சென்றால் விளைவு சூனியமே.
உலகத்தை இரட்சிக்கப் பிறந்த பிரம்ம நிர்வாணம் இன்று பிரம்ம சூனியமாகக் காட்சி தருவதால், மரங்களையும் வனங்களையும் இரட்சித்து வாழ்வு பெறவேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்பது தமிழ் மறை. தமிழ்மறையில் அறத்துப்பால் ஓதும் போது இல்லறவியல், துறவற இயல், ஊழியல் என்று வள்ளுவம் வகுத்தளித்துள்ளது. சம்ஸ்கிருத வேதத்தில் பாலகம், பிரம்மச்சரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், பரப்பிரும்மம் என்று புருஷார்த்தம் வகுக்கப்பட்டிருக்கிறது.
பன்னிரண்டு பிராயம் வரை குழந்தைப் பருவம். பன்னிரண்டு முதல் இருபத்தி நான்கு வரை பிரம்மச்சரியம். கிரகஸ்தம் ஒரு கடுமையான பரீட்சை. அதில் தேறியபின் வானப்பிரஸ்தம். வனவேளாண்மையைச் சொல்லும் போது ஏன் வாழ்வு நெறிகளைப் பேசவேண்டும்?
வாழ்வுக்குரிய வனவேளாண்மை கல்வியுடனும் வாழ்வு நெறியுடனும் முற்காலத்தில் தொடர்புடையாதாக இருந்தது. குறிப்பாக அந்தக் காலக் கல்விக்கு குருகுலம் அடிப்படை. இந்தக் காலத்தில் மூன்று வயது நிறையும் முன்பே குழந்தையை எல்.கே.ஜி.யில் சேர்த்து விடுகிறார்கள். துள்ளி விளையாட வேண்டிய பருவம் பள்ளிச்சிறையில் தள்ளப்பட்டு ஆண்டுக்கு ஆண்டு புத்தகச்சுமை முதுகில் கட்டப்படுகிறது.
அன்று பன்னிரண்டு வயது வரை அரிச்சுவடி தான். பின்னர் அவன் ஒரு குருவை நாடி குருவிடமிருந்து சங்கீதம், நிருத்தியம், மறை ஓதுவது, அகடவிகடம், அறம், பொருள், இன்பம், வில்வித்தை, ஈட்டி எறிதல், போர்க்கலை, என்று பேசக்கூடிய
64 கலைகளில் விருப்பமுடையவற்றைக் கற்கிறான்.
பொதுவாக குருகுலவாசம் ஆரண்யங்களில் வாழும் சித்தபுருஷர்களான மகரிஷிகளிடம் அவர்களின் ஆசிரமங்களில் நிகழ்ந்து வந்தது. ஆரண்யம் என்றால் காடு என்று பொருள். குருகுலக் கல்வி முறையில் சிஷ்யர்கள் எந்தக் கலை கற்றா
லும் குருவின் ஆசிரமத்தைச் சுற்றியுள்ள வனங்களில் வேளாண்மை செய்வது கட்டாயப்பாடம். இப்படித்தான் வனவேளாண்மையின் பாரம்பரியத்தை உய்த்
துணர வேண்டும்.
இவ்வாறே கிருகஸ்தம் அதாவது இல்லறம் என்ற நல்லறம் கசந்துவிட்டபின் துறவறம் அல்லது வானப்பிரஸ்தம் தொடர்கிறது. வானப்பிரஸ்தம் என்பது பரம்பொருளை நோக்கி சித்தி பெறும் ஒரு சன்மார்க்கம். விண்ணுலகில் தேவர்களோடு சேர்தல். அதற்குப் பிறவிப் பெருங்கடலை நீந்த வேண்டும். நகருக்கு வெளியே வாசம் செய்யவேண்டும். வனம் இருந்தால் தானே அது முடியும்.
இந்தக் காலக் கல்வியோடு அந்தக்காலக்கல்வியை ஒப்பிட்டால் நாம் எந்த அளவுக்கு இயற்கையை மட்டுமல்ல, ஒழுக்கத்தையும் மறந்துவிட்டோம் என்று
புலனாகிறது. இந்தக் காலக் கல்வியின் நோக்கம் பணம். கல்வி நிறுவனங்களின் நோக்கம் கற்பித்தலைவிட பணம் சம்பாதிப்பதே.
மாணவர்கள், ஆசிரியர்கள், நிறுவனர்கள் எல்லோருமே பணத்தையே குறிவைப்பதால் மனித ஒழுக்கம் மறந்து போய்விட்டது. அந்தக்கால குருகுலக் கல்வியின் நோக்கம் விநயம். அதாவது, அடக்கம். அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும் என்கிறார் வள்ளுவர்.
விநயம் வந்துவிட்டால் சத்தியம், பக்தி, குருவுக்கும் பெற்றோருக்கும் மரியாதை எல்லாம் தொடர்ந்து வரும். இயற்கையை நேசித்தால் எல்லாம் இயலும். இன்றைய கல்வியில் விநயம் போய் பணமே பிரதானமானதால் வளர்ச்சியைப் பணத்தால் அளவிடுகிறோம்.
இயற்கையைப் பணமாகப் பார்த்துப் பழகிவிட்டதால் ஐம்பது வருடம் வளர்ந்த ஒரு மரத்தைப் பார்த்து இதை வெட்டினால் ஐந்து லட்சம் கிடைக்கும் என்று ஒரு அரசு நினைக்கிறது. உடனே டெண்டர் விடுகிறது. அடர்ந்து ஓங்கி வளர்ந்துள்ள இந்தப்பச்சை மரம் வழங்கும் உயிர்க்காற்று எவ்வளவு? இம்மரம் விடும் மூச்சுக்காற்று விண்ணில் எந்த அளவுக்கு ஓசோன் படலமாகி இந்த பூமியின் வெப்பத்தைத் தணிக்கிறது என்றெல்லாம் யோசனை ஏற்படுவது இல்லை.
நாம் படித்த படிப்பு இப்படி நம்மை யோசிக்க வைப்பதில்லை. மரங்களை நட்டு, வனங்களை மீட்பதே கல்வியின் பணி. இப்பணியை நாம் எப்படிச் செய்யவேண்டும் இங்கு தான் வனவேளாண்மை அர்த்தமாகிறது.
வனவேளாண்மை என்பதைப் பல கண்ணோட்டங்களில் புரிந்து கொண்டு செயல்படுவது நலம்.
அடர்த்தியற்ற வனப்பகுதிகளைக் காகிதத் தொழிற்சாலைக்கு ஏலம் விடாமல் அங்கு மரங்களை வளர்த்து அடர்காடுகளாக மாற்றவேண்டும்.
அப்பகுதிகளில் மரநடவு செய்யும்போது மரமதிப்பு (பஐஙஆஉத யஅகமஉ) இல்லாத ஆல், அரசு, இலுப்பை, அத்தி, சந்தனவேம்பு, பாலை, காட்டுமா, கோங்கு என்ற செவ்விலவு, நாவல், புன்னை, இச்சி, முள்ளுமுருங்கை, வில்வம், சரக்கொன்றை, வாகை, குல்மோகர் என்ற தீக்கொன்றை, வேம்பு, பனை, சேரான் கொட்டை, புங்கன், மகிழம், ஆத்தி என்ற செம்மந்தாரை, வேங்கை, வாதா, வாதநாராயணன் போன்ற மரங்களைத் தேர்வு செய்வது நலம்.
தரிசு நிலமேம்பாட்டுத்திட்ட அடிப்படையில் வருவாய்த்துறைக்குச் சொந்தமான அரசு நிலங்களைப் புறம்போக்கு என்று ஒதுக்கி மனைப்பட்டாவாக
மாற்றிக் கொள்ளையடிக்காமல், மேற்கூறிய மரங்களை நட்டு வேளாண் காடுகளைப் புறநகர்ப்பகுதிகளில் உருவாக்க வேண்டும்.
மரக்கன்றுகளை நட்டவுடன் பத்தடி உயரும் வரை உயிர்நீர் ஊற்றிக்காப்பாற்ற வேண்டும். அதன் பின் அம்மரம் உயிர்நீரை மண்ணுக்குள் தனக்குத்தானே தேடிக்கொண்டு உயர்ந்துவிடும்.
பட்டாநிலங்களும் தரிசாகி வருகின்றன. வறட்சி, வேலைக்கு ஆள் கிடைக்காத நிலை, விவசாயத்தில் ஏற்படும் நஷ்டம், ஆகிய காரணங்களினால் சிலர் நிலத்தை விற்க முற்படுகின்றனர். வேறுசில விவசாயிகள் காகிதத் தொழிற்சாலைகளுடன் ஒப்பந்த அடிப்படையில் யூகலிப்டஸ், சவுக்கு, மூங்கில், மலைவேம்பு மரங்களை சாகுபடி செய்கின்றனர்.
இது தவறு அல்ல. அதே சமயம், நீண்டகாலம் வளர்ந்து பலன் தரக்கூடிய குமிழ், மகோகனி, தேக்கு, சந்தனம், செம்மரம் எனப்படும் செஞ்சந்தனம், பூவரசு, ரோஸ்வுட் என்ற தோதகத்தி போன்றவற்றையும் தேர்வு செய்யலாம்.
மரங்களுடன் இணைந்த பயிர்விவசாயமும் வனவேளாண்மையின் ஒரு அம்சம். காய்கறி சாகுபடியை அகத்தி முருங்கையுடன் இணைக்கலாம். உங்கள் தோட்டத்திலேயே காடுவளர்ப்பது என்றால் மரங்களை நெருக்கமாக ஏழடி இடை வெளியில் நடலாம். மேட்டுப்பகுதியில் இப்படி நெருக்கமாக மரங்களை நட்டுப் பள்ளப்பகுதியில் காய்கறி, பயிரிடலாம்.
காய்கறிப் பயிர்களுக்குரிய கார்பன் தேவையை அதாவது உரத்தேவையை மரங்கள் உதிர்க்கும் இவைகளிலிருந்து பெறவேண்டும். பர்மாகல்ச்சர் (Perma caltune) என்ற பெயரில் ஆஸ்திரேலியாவில் இந்த சாகுபடி முறை பிரபலமாயுள்ளது.
கரும்பும் நெல்லும் பயிரிட்டுவந்த எனது நண்பர் ஒருவர் கரும்பு பயிரிட்டு கட்டிங் ஆர்டர் வராமல் கரும்பு காய்ந்து ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட மூன்று ஏக்கர் நிலத்தைவிற்றார். நெல் பயிரிட்ட நஞ்சையைப் புஞ்சையாக்கி மரசாகுபடியில் இறங்கி வெற்றி பெற்றுவருகிறார்.
குளத்து வேலைத்திட்டம் காரணமாக அவருக்கு வேலைக்கு ஆள் கிட்டாததால் நஞ்சை நிலம் புஞ்சையானதும் நன்மைக்கே. நூற்றுக்கணக்கில் ரோஸ்வுட் மரம் நீண்டகாலப்பயனுக்கும், குறுகிய காலப்பயனுக்கு, பிளைவுட் தொழிலுக்கு ஏற்ற மலைவேம்பு நூற்றுக் கணக்கில், 40 தென்னைகளுக்கு ஊடுபயிராக பட்டு வளர்ப்புக்குரிய மல்பரிச் செடிகள், வடுமாங்காய் - சென்னைஸ்டார் ஹோட்டல் தேவைக்கு நாட்டு மாமரம் பல. கொய்யா, பப்பாளி நிறைய உண்டு. ஐநூறு அகில் மரங்கள் இயற்கை வழி அகர்பத்திப் பயனுக்கு.
இதோடு இவர் விடுவதாயில்லை. வேலிப்பயிராக மூன்று அடி இடைவெளியில் பனங்கொட்டை நட்டுப் பத்தாண்டில் மரமாக்கி நுங்கு விற்பனைக்கும் திட்டமிட்டுள்ளார். பனை நடுவதின் முக்கியப்பயன் நிலத்தடி ஊற்றுவற்றாது என்பது இவர் கருத்து. ஒரு வகைப்பயிர் சாகுபடி என்பது ஒருமைப்பண்பு. இது பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு முராணானது.
கால நிலை மாற்றத்தின் பாதிப்புக்கு ஆளாகாமல் காப்பாற்றிக் கொள்ளப் பலவகை மரப்பயிர் சாகுபடிக்கு வழிகாட்டுகிறார். இவர், இரு சால் உழவு மூலம் 34 வகையான சிறுதானியங்களை சாகுபடி செய்து ரூ.52,000 லாபம் பெற்ற சாதனையாளா. இவரைப்போல் பலர் மாவட்டந்தோறும் உதயமாக வேண்டும்.
ஆகவே, உலகமக்கள் அனைவரும் மரவளர்ப்பு என்ற கல்வியைக்கற்று வாழ்வுக்காக வனவேளாண்மை செய்து நாட்டைக் காப்பாற்றவேண்டும். வனவேளாண்மையில் புத்தனுக்கு ஞானம் வழங்கிய அரசமரத்தை மறந்து விடாதீர்கள்.
அரசமரம் ஒரு ஆக்சிஜன் மரம். ஆலமரமும் பனைமரமும் நீருற்று மரங்கள். மழையின் வித்துக்களாக உள்ள வேறு பல்வகைப்பால் மரங்களும் வாழ்வு தரும் வனவேளாண்மையின் அங்கங்கள்.
பால்வடியும் மரங்களை வாழ வைத்தால் மாதம் மும்மாரி பெய்யும் என்பது நம்பிக்கை. வனவேளாண்மைதான் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் புவி வெப்பமாதலைத் தடுக்கும் என்பதால் வனவேளாண்மையே வாழ்வின் தேவை.

கட்டுரையாளர்:
இயற்கை விஞ்ஞானி.

முழு கட்டுரையைப் படிக்க →