நடுப்பக்கக் கட்டுரைகள்

அமைதியே நல்லது!

ஹிந்தி விவகாரத்தில் மத்திய அரசு அமைதியாக இருந்தாலே அவர்கள் எதிர்பார்க்கும் மாற்றம் இயல்பாகவே நிகழும்.

ம. விஸ்வநாதன்

மகாராஷ்டிரத்தில் தொடக்க நிலை மூன்றாவதுவது மொழியாக ஹிந்தியைக் கற்பிக்கும் வகையில் வெளியி டப்பட்ட அரசாணைகளை அந்த மாநில அரசு திரும்பப் பெற்றிருக்கிறது.

மகாராஷ்டிரத்தில் பாஜக தலைமையில் சிவசேனை (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார்) ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி உள்ளது. இங்கு மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு 2020) ஏற்ப மாநில பள்ளிக்கல்வி பாடத் திட்ட கொள்கை கடந்த ஆண்டு வகுக்கப்பட்டது.

அதன்படி, மாநிலத்தில் மராத்தி மற்றும் ஆங்கில வழிக் கல்வி பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மூன்றாவது மொழிப் பாடமாக ஹிந்தி கற்பிக்கப்படும் என்று கடந்த ஏப்ரலில் அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், அந்த அரசாணை நிறுத்தி வைக்கப்பட்டது.

அதன் பின்னர் திருத்தப்பட்ட அரசா ணையில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மூன்றாவது மொழியாக ஹிந்தி கற்பிக்கப்படும். குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்த 20 சதவித மாணவர்கள் விரும்பினால் ஹிந்தியைத் தவிர வேறு பிராந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றைக் கற்கலாம் என்று குறிப்பிடப்பட்டது. இதற்கும் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின.

சிவசேனை நிறுவனர் பால் தாக்கரே காலத்தில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று மகாராஷ்டிர நவநிர் மாண் சேனை என்ற கட்சி தொடங்கிய அவரது தம்பி மகன் ராஜ் தாக்கரேவும். பால் நாக்கரே மகனான உத்தவ் தாக்கரேவும் இணைந்து ஹிந்தி திணிப்புக்கு எதிராகப் போராடப் போவதாக அறிவித்தனர்.

இதையடுத்து, இந்த அரசாணையை நிறுத்திவைப்பதாக மகாராஷ்டிர அரசு பின்வாங்கியதுடன், மொழிக் கொள்கை குறித்து ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்க கல்வியாளர் நரேந்திர ஜாதவ் தலைமையில் குழு அமைத்துள்ளது.

எங்களை ஒன்றிணைக்க பால் தாக்கரே முயற்சி செய்தார். அவரால் இயலவில்லை. அவரால் முடியாததை ஹிந்தி திணிப்பு அறிவிப்பின் மூலம் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் செய்துள்ளார் என மும்பையில் நடைபெற்ற வெற்றி பொதுக்கூட்டத்தில் ராஜ் தாக்கரே பேசியுள்ளார். 20 ஆண்டுகளுக்குப் பின்னர், அவர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் பேரவையில் ஆளலாம். ஆனால் தெருக்களை நாங்கள்தான் ஆள்கிறோம்' என்று அந்தக் கூட்டத்தில் ராஜ் தாக்கரே எச்சரிக்கை விடுத்தார். அதற்கேற்ப, மராத்தி தெரியாது என்று கூறியவரின் அலுவலகத்தை அவரது கட்சித் தொண்டர்கள் தாக்கியுள்ளனர்.

வலுவாக இருந்த சிவசேனையை உடைத்து ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்தே பாஜக மீது உத்தவ் தாக்கரே கடும் கோபத்தில் இருந்தார். ஏக்தாத் ஷிண்டே பிரிவின் கை ஓங்கி உத்தவ் அணி மிகவும் பலவீனம் அடைந்திருந்தது. இந்தச் சூழ லில் ஹிந்தி விவகாரம் அந்த அணிக்கு அரசியல்ரீதியாக மீண்டெழுவதற்கான நல்லதொரு வாய்ப்பைக் கொடுத்துள்ளது.

மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்தாலும் பாஜக அரசு இருந்தாலும் ஹிந்தி திவஸ் (நாள்) கொண்டாடப்படும்போது,

இந்தியாவின் அலுவல்மொழியாக அனைத்து மாநிலங்களும் ஹிந்தியைப் பயன்படுத்த வேண்டும் என்று அறைகூவல் விடுப்பது தொடர்ந்து வருகிறது. தமிழகத்தைச் சேர்ந்த ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோதும் இதுபோன்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மூன்று மொழிகளைப் பொருத்தவரை, முந்தைய கல்விக் கொள்கைகளைவிட 2020 தேசிய கல்விக் கொள்கை நெகிழ்வாசு உள்ளது. ஹிந்தி என்று குறிப்பிடாமல் ஏதேனும் மூன்று மொழிகள் என்றே வலியுறுத்துகிறது. ஆனால், நடைமுறையில் இது ஹிந்தி என்றே ஆகிவிடும் என்பதே ஹிந்தி பேசாத ஒரு சில மாநிலங்களின் அச்சமாக உள்ளது.

20 சதவீத மாணவர்கள் விரும்பினால் வேறு ஒரு மொழி என்பதையும் நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினம். நாடு முழுவதும் மற்ற பாடங்களுக்கே போதிய அளவில் ஆசிரியர்கள் இல்லை என்ற சூழ்நிலையே உள்ளது. இந்த நிலையில் பல மொழிகளுக்கு ஆசிரியர் தேடுவது சாத்தியம் இல்லாதது.

பல மொழிகள் பேசப்படும் இந்தியாவில் மொழிப் பிரச்னை மிகவும் உணர்வுபூர்வ மானது. ஹிந்தி விவகாரம் காரணமாகவும் தமிழகத்தில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் கடந்த 58 ஆண்டுகளாக ஆட்சிக்கு வர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பிரச்னையை முள் மீது விழுந்த சேலை போன்று கையாள்வது அவசியம். இல்லையெனில் பாதிப்புதான் ஏற்படும்.

இந்தியர்கள் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் சென்று பணிபுரிய அரசமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது. இன்றையசூழலில், வடக்கு மற்றும் வட கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்தான் தமிழகத்தில் சென்னை மட்டும் என்றில்லாமல் தமிழகம் முழுவதும் உடலுழைப்பு தேவைப்படும் அனைத்துப் பணிகளிலும் அதிகமாக உள்ளனர்.

மலைப் பிரதேசங்களான வால்பாறை, நீலகிரி மாவட்டம் மஞ்சூர் போன்ற பகுதிகளிலும்கூட அவர்கள் பணிபுரிகிறார்கள். திருப்பூர் ஜவுளித் துறையே அவர்களை நம்பித்தான் உள்ளது என்று கூறும் அளவுக்கு இருக்கிறது.

தமிழர்களைவிட குறைந்த ஊதியம், அதிக நேரம் உழைப்பு, சட்டம் பேசாதது, விடுப்பு எடுக்காதது போன்றவற்றால் அவர்களையே தமிழக தொழிலதிபர்களும் விரும்புகின்றனர். அதிகம் படிப்பறிவு இல்லாதபோதும் அவர்கள் ஓரளவு தமிழில் பேசுகின்றனர். நம்மவர்களும் அவர்களிடம் பேசும் அளவுக்கு குறைந்த அளவு ஹிந்தி தெரிந்து வைத்துள்ளனர். தேவைப்படுபவர்கள் எப்படியோ எந்த ஒரு மொழியையும் கற்றுக் கொள்கிறார்கள்.

எப்போது சிபிஎஸ்இ பள்ளிகள் அனுமதிக்கப்பட்டனவோ அப்போதே ஹிந்தி கற்கும் வாய்ப்பும் மாணவர்களுக்கு கிடைத்து விட்டது.

தமிழகத்தில் திமுக அரசும் மத்தியில் பாஜசு அரசும் எந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தாலும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது என்பது வாடிக்கையாகி விட்டது. இந்தப் பின்னணியில் ஹிந்தி விவகாரத்தில் மத்திய அரசு அமைதியாக இருந்தாலே அவர்கள் எதிர்பார்க்கும் மாற்றம் இயல்பாகவே நிகழும். மாறாக, உடும்புபோன்று பிடிவாதம் பிடித்தால் எதிர்மறையான விளைவே ஏற்படும் என்பதை மத்திய அரசு உணர்ந்தால் நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மல்லிக காந்தா... ராஷி கண்ணா!

ஜாடையில் மயங்கி... ஐஸ்வர்யா மேனன்!

ஆசையில் தொடங்கி... ருக்மிணி வசந்த்!

வங்கதேசத்தை வீழ்த்துமா ஆப்கானிஸ்தான்? 155 ரன்கள் இலக்கு!

மலபார் ராகம்... ஆன் ஷீத்தல்!

SCROLL FOR NEXT