சிறப்புக் கட்டுரைகள்

உங்க ஜாதகத்துல D 24 இருந்தால், உங்களுக்கு ஐஐடியில் பயிலும் யோகம் உண்டு! (பார்ட்- 2)

ஐ.ஐ.டி.யில் பி.டெக் படித்து வரும் 50 மாணவர்களின் ஜாதகங்களை ஆய்வு செய்ததில் அவர்களின் புத்தி கூர்மையும், படிப்பு திறனும் அதிகமாக உள்ளது இங்கே கண்டறியப்பட்டுள்ளன D24இன் 4- ஆம் அதிபதியும், 4-ஆம் வீடும்

சுவாமி சுப்பிரமணியன்

இந்த ஜாதகர் ஐ.ஐ.டி சென்னையில் பி.டெக் கம்பியூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படித்து வருகிறார். D1 இல் லக்னாதிபதியாகிய குரு வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்து சூரியன்,புதன், சுக்கிரனுடன் சேர்ந்து பலம் பெறுகிறார். குருவே நான்காம் அதிபதியாகவும் உள்ளது சிறப்பு, 5-ம் வீட்டு அதிபதி செவ்வாய் ராகுவோடு சேர்ந்து 10- ஆம் வீட்டில் அமர்ந்து 4,5 ஆம் வீடுகளை பார்ப்பதும் சிறப்பான அமைப்பாகவே கருத வேண்டும். 

விதி எண் -1 இன்படி

D24 இன் 4-ஆம் வீட்டு அதிபதி செவ்வாய் 9- ஆம் வீட்டில் தன் சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் அமர்ந்து 4-ம் வீட்டை பார்ப்பது சிறந்த கல்வியோகத்தை தருகிறது எனலாம். 

விதி எண் - 2 இன்படி 

D1 இன் 4- ஆம் அதிபதி குரு னு24 இல் 8-ஆம் வீட்டில் அமர்ந்தாலும் தனது சொந்த வீடான மீனத்தில் ஆட்சி பலத்துடன் அமர்ந்துள்ளது ராசியின் 4- ம் அதிபதி பலம் பெறுவதை காட்டுகிறது. 

விதி எண் 3-இன்படி

D24 இன் லக்னத்தில் சுக்கிரன் அமர்ந்து பலம் சேர்ப்பதும், லக்னாதிபதி சூரியன் 11இல் அமர்ந்து புத்தி கூர்மை ஸ்தானமான 5-ஆம் இடத்தை பார்ப்பதும் சிறந்த அமைப்பாகவே கருதப்படுகிறது.

விதி எண் 4-இன்படி
 

1,2,4,5,9 ஆகிய பாவகங்களிடையே அற்புதமான தொடர்பு இங்கே ஏற்பட்டுள்ளது. லக்னாதிபதி சூரியன் ஐந்தாமிடத்தில் உள்ள ராகு கேதுகளை பார்ப்பதும், வாக்கு ஸ்தான அதிபதி புதனுடன் குரு ஆட்சி பலத்துடன் சேர்ந்து நிற்பதும். குரு புத்தி கூர்மையை வெளிப்படுத்து கிரகமாகும். தனது கண்டு பிடிப்புகளை அற்புதமாக வெளிப்படுத்தும் திறன் இந்த ஜாதகருக்கு உண்டு. 8-ம் இடம் மறைந்துள்ள உண்மைகளை குறிக்கும் ஸதானமாகும். 4-ஆம் அதிபதி செவ்வாய் 9-ம் ஸ்தானமான உயர்கல்வி ஸ்தானத்தில் அமர்ந்து ஆட்சி செய்கிறார். எனவே இங்கே மேற்குறிப்பிட்ட 5 பாவகங்களிடையே அதிகமான தொடர்பு உள்ளதை அறிய முடிகிறது.

விதி எண் 5-இன் படி

சந்திரன் தனது உச்ச ராசியில் அமர்ந்து அதுவே ஸ்திர ராசியாகவும் இருந்து மனம் அதிக சமநிலை அடைந்து ஆழ்ந்து சிந்திக்கும் திறனை கொடுக்கிறது. சூரியன், சந்திரன், செவ்வாய்,புதன், குரு, சனி ஆகிய கிரகங்கள் மீனம் முதல் மிதுனம் வரை வரிசையாக அமர்ந்து தங்களுக்குள் உள்ள தொடர்பை வெளிபடுத்துகின்றது. னு24 இல் 3 கிரகங்கள் ஆட்சி உச்சம் அடைந்து இந்த ஜாதகரின்; கல்வியை சிறப்பிக்கிறது எனலாம். 5-ம் இடத்தில் உள்ள ராகு கேதுக்களுக்கு திரிகோணத்தில் ஆட்சி பலத்துடன் செவ்வாய் நிற்பது கம்பியூட்டர் இஞ்ஜினியர் என்பதை உறுதிபடுகிறது. இவர் இத்துறையில் மறைந்துள்ள பல உண்மைகளை வெளி கொண்டு வருவார் என்பதிலும் சந்தேகமில்லை.

ஆய்வில் கண்டறிந்த உண்மைகள்...

1. விதிஎண் 1-இன் படி 40 ஜாதகங்களில்(80மூ) D24 இன் 4- ஆம் வீடும், 4-ஆம் அதிபதியும் நன்றாக அமைந்துள்ளன.
2. விதி எண்2- இன்படி 36 ஜாதகங்களில் (72மூ) D1இன் 4-ஆம் அதிபதி னு24இல் பலமாக அமைந்துள்ளன.
3. விதிஎண் 3-இன்படி 34 ஜாதகங்களில் (68மூ) D24 இன் லக்னம், லக்னாதிபதி சிறப்பாக உள்ளனர்.
4. விதிஎண் 4- இன்படி 33 ஜாதகங்களில் (66மூ) D24இன் 1,2,4,5,9ஆம் வீட்டு அதிபதிகள் தொடர்பு பெற்று உள்ளனர்.
5. விதிஎண் 5-இன்படி 31 ஜாதகங்களில் (62மூ) சூரியன், சந்திரன்,புதன், செவ்வாய், குரு, கேது ஒன்றுக்கொன்று தொடர்பில் உள்ளன.
6. விதிஎண் 6-இன்படி 30 ஜாதகங்களில் (60மூ) செவ்வாய், சுக்கிரன் தொடர்பும், சனி ஆட்சி அல்லது உச்சம் பெற்று உள்ளன. 

முடிவுரை...

ஐ.ஐ.டி.யில் பி.டெக் படித்து வரும் 50 மாணவர்களின் ஜாதகங்களை ஆய்வு செய்ததில் அவர்களின் புத்தி கூர்மையும், படிப்பு திறனும் அதிகமாக உள்ளது இங்கே கண்டறியப்பட்டுள்ளன D24இன் 4- ஆம் அதிபதியும், 4-ஆம் வீடும் 80மூல ஜாதகங்களில் சிறப்பாக அமைந்துள்ளன. மேலும் D1 இன் 4-ஆம் அதிபதி D24 இல் 72மூல ஜாதகங்களில் பலமாக அமைந்துள்ளன. பொதுவாக னு24இன் லக்னம் லக்னாதிபதி பலமாக அமைந்து விட்டால் கல்வி சிறப்படையும் என்பது 68மூல ஜாதகங்களில் காண முடிகிறது. D24 இன் லக்னம், வாக்கு ஸ்தானம், பள்ளி கல்வி ஸ்தானம், புத்திகூர்மை ஸ்தானம், உயர்கல்வி ஸ்தானம் இவைகள் ஒன்றுக் கொன்று தொடர்பு பெற்று 66மூல ஜாதகங்களில் காணப்பட்டன. சூரியன், சந்திரன், செவ்வாய்,புதன், குரு, கேது ஆகிய கிரகங்களும் ஒன்றுக் கொன்று தொடர்பில் உள்ளதும் 62மூல ஜாதகங்களில் காண முடிகின்றன. எனவே சதுர்விம்சாம்சம் மூலம் ஒருவரின் கல்வியின் தரத்தை நிர்ணயிக்க வேண்டும் என்பது இவ்வாய்வின் முடிவாகும்.

ஆதார நூல்கள்..

1. Sanjay Rath, Varga Chakra, Sagar Publications, 72 Janpath Ved Mansion, New Delhi – 110001

2. V.P.Goel, Comprehensive Prediction by Divisional Charts, Sagar Publications, 72 Janpath Ved Mansion, New Delhi – 110001

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஷேக் ஹசீனாவின் அறிக்கைகளை வெளியிட்டால் கடும் நடவடிக்கை! ஊடகங்களுக்கு வங்கதேச அரசு எச்சரிக்கை!

அமித் ஷாவுக்கு தேநீர் விருந்து அளித்த நயினார் நாகேந்திரன்

சென்னையில் கனமழை

ஹீரோ ஆசிய ஹாக்கி 2025: கோப்பையை அறிமுகப்படுத்தினார் துணை முதல்வர் உதயநிதி!

இந்தியாவுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்த தயார்: பாகிஸ்தான் அறிவிப்பு!

SCROLL FOR NEXT