சிறப்புக் கட்டுரைகள்

பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு: தமிழகத்தில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம்!

பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம் இதுவாகும்

சி.பி.சரவணன்

பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம் இதுவாகும்.

ஏற்கனவே மதுரை மல்லிகை, ஈரோடு மஞ்சள், நீலகிரி தேயிலை உள்ளிட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் 29வதாக இணைகிறது பழனி பஞ்சாமிர்தம்.

புகழ்பெற்ற பழனி பஞ்சாமிர்தம் தனிருசி கொண்டது. வாழைப்பழம், வெல்லம், பசுநெய், தேன், ஏலக்காய் ஆகிய 5 இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் தனித்துவம் வாய்ந்த பஞ்சாமிர்தம் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

திரவ நிலையில் இருந்தாலும் இதில் ஒரு சொட்டு நீரும் கலப்பதில்லை. பராமரிப்பதற்காக எந்த ஒரு கூடுதல் செயற்கைப் பொருளையும் இதில் சேர்ப்பதில்லை. இத்தனை சிறப்பு மிக்க பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்கும்படி கோரி, பழனி கோவில் நிர்வாகம் சார்பில் விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.

இதனை ஏற்று பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்படும் என்று ஜியாகரபிகல் இன்டிகேசன்ஸ் அமைப்பின் பதிவாளர் சின்னராஜா தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திறந்துகிடக்கும் கழிவுநீா் கால்வாயால் ஆபத்து

சவுடு மண் எடுக்க பொதுமக்கள் எதிா்ப்பு

சீா்காழி குறுவட்ட போட்டியில் ச.மு.இ.பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

குடியரசுத் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு

எஸ்பிஐ வங்கி செயலி புதுப்பிப்பதாக கூறி இணைய வழியில் மோசடி: போலீஸாா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT