சிறப்புக் கட்டுரைகள்

தினமணி 85: தினமணி குறித்து ஆய்வு செய்து பட்டம் பெற்றவர்களுக்கு ஒரு மகத்தான வாய்ப்பு!

தினமணி


தினமணியில் வெளியான கட்டுரைகள் குறித்தோ அல்லது தினமணி குறித்தோ ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு ஒரு மகத்தான வாய்ப்பு காத்திருக்கிறது.

உங்களது தினமணி 85-ஆவது ஆண்டு இதழியல் பணியை நிறைவு செய்து 86வது ஆண்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறது. அதைக் கொண்டாடும் விதமாக தினமணி 85 என்கிற சிறப்பிதழ் வெளிவருகிறது.

தினமணி பத்திரிகை வெளியாகி 85 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, வெளியாகும் தினமணி 85 என்கிற சிறப்பிதழில் தமிழ் அறிஞர்களும், நிறைஞர் அல்லது முனைவர் பட்டம் பெற்றவர்களும் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தினமணியில் வெளியான கட்டுரைகள் குறித்தோ அல்லது தினமணி குறித்தோ ஆய்வு செய்து ஆய்வியல் நிறைஞர் அல்லது முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு இது ஒரு மகத்தான வாய்ப்பாகவே அமையும். 

நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.. உங்கள் ஆய்வு குறித்த சுருக்கத்தை புகைப்படம், தன்விவரக் குறிப்புடன் உடனடியாக கீழ்க்காணும் முகவரிக்கு அல்லது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.

இதன் மூலம் நீங்கள் அனுப்பும் கட்டுரை, உங்கள் புகைப்படத்துடன் தினமணி 85 சிறப்பிதழில் வெளியாகும் வாய்ப்பு கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

முகவரி

ஆசிரியர், 
தினமணி நாளிதழ்,
எக்ஸ்பிரஸ் கார்டன்ஸ், 
எண்.29, இரண்டாவது முதன்மைச் சாலை, 
அம்பத்தூர் தொழிற்பேட்டை, 
சென்னை - 600 058
மின்னஞ்சல் - dinamani85@dinamani.com

•••

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT