2024-ல் திருமண உறவில் இணைந்த சின்ன திரை நட்சத்திரங்கள்!  
சிறப்புக் கட்டுரைகள்

2024 - திருமண உறவில் இணைந்த சின்ன திரை நட்சத்திரங்கள்!

Year ender 2024 - இந்த ஆண்டு திருமணம் செய்துகொண்ட சின்ன திரை பிரபலங்களின் பட்டியல் குறித்து...

வினோத் சந்திரன்

சினிமாவில் தோன்றும் நடிகர் - நடிகைகளை போன்றே இப்போதெல்லாம் சின்ன திரையில் நடிக்கும் நடிகர் - நடிகைகளும் மக்கள் மனதில் இடம்பெற்று நட்சத்திரங்களாக ஜொலிக்கின்றனர்.

திருமணமாகாத சின்ன திரை நட்சத்திரமாக இருந்தால் தொடரில் பெரும்பாலும் தங்களுடன் இணைந்து நடிக்கும் நடிகர் அல்லது நடிகையைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டு உண்மையான காதல் இணையர்களாக ஆகிவிடுகிறார்கள். இதுவும் அவர்களது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாகவே அமைந்துவிடுகிறது.

ஒரு சிலர் சினிமா துறை சாரராதவர்களையும், பிற தொழில் செய்பவர்களையும் திருமணம் செய்கிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு திருமணம் செய்துகொண்ட சின்ன திரை நட்சத்திரங்கள் யார், யார்?

வெற்றிவசந்த் - வைஷ்ணவி

சிறகடிக்க ஆசை தொடர் நாயகன் வெற்றி வசந்த்-க்கும், பொன்னி சீரியல் நாயகி வைஷ்ணவிக்கும் கடந்த நவ. 28 ஆம் தேதி நெருங்கிய சொந்தங்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இவர்கள் சில மாதங்களே காதலித்து திருமண வாழ்க்கையில் இணைந்தனர்.

வெற்றிவசந்த் - வைஷ்ணவி

கண்மணி மனோகரன் - அஷ்வத்

பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து பிரபலமான நடிகை கண்மணி மனோகரன், தான் நீண்டகாலமாக காதலித்து வந்த தொகுப்பாளர் அஷ்வத்தை பெற்றோர் சம்மதத்துடன் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார். தொகுப்பாளர் அஷ்வத், சன் தொலைக்காட்சியின் வணக்கம் தமிழா உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

கண்மணி மனோகரன் - அஷ்வத்

சுரேந்தர் - நிவேதிதா

திருமகள் தொடரின் மூலம் பிரபலமான நடிகை நிவேதிதா, இத்தொடரில் நடித்துக்கொண்டு இருக்கும்போது, நாயகன் சுரேந்தர் உடன் நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறிய நிலையில், நிவேதிதா - சுரேந்தருக்கு உற்றார் உறவினர் முன்னிலையில் பிரமாண்டமான முறையில் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்து முடிந்தது. இவர்களுக்கு சில நாள்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

நிவேதிதா - சுரேந்தர்

தர்ஷனா - அபிஷேக்

கனா தொடர் பிரபலமான நடிகை தர்ஷனா அசோகன் தனது நீண்ட நாள் காதலர் அபிஷேக்கை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் எளிமையாக திருமணம் செய்து கொண்டார். தர்ஷனா - அபிஷேக் ஜோடிக்கு கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது.

அபிஷேக் - தர்ஷனா

ஸ்ரீகோபிகா - வருண் தேவ்

சுந்தரி தொடரில் அனு பாத்திரத்தில் நடித்த ஸ்ரீகோபிகா, வருண் தேவ் என்பவரை கடந்த அக். 17 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் குருவாயூர் கோயிலில் எளிமையான முறையில் நடைபெற்றது. தனக்கு குடும்பத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் நடைபெற்றதாகத் தெரிவித்து, திருமணப் புகைப்படங்களை ஸ்ரீகோபிகா பகிர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

வருண் தேவ் - ஸ்ரீகோபிகா

ஸ்ரித்திகா - ஆர்யன்

'நாதஸ்வரம்' தொடரில் மலராக நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ஸ்ரித்திகா. இவர் 'குலதெய்வம்', 'என் இனிய தோழி', 'கல்யாணமாம் கல்யாணம்', 'கல்யாணப் பரிசு', 'மகராசி' தொடர்களில் நடித்துள்ளார். மகராசி தொடரில் நடிக்கும்போது இத்தொடரின் நாயகன் எஸ்.எஸ்.ஆர். ஆர்யனுடனான நட்பு காதலாக மாறியது. இந்நிலையில் ஸ்ரித்திகா - ஆர்யன் இருவரும் ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டதாக அறிவித்தனர்.

ஸ்ரித்திகா - ஆர்யன்

பிரேம் ஜேக்கப் - ஸ்வாசிகா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நீ நான் காதல் நாயகன் பிரேம் ஜேக்கப், மலையாள சின்ன திரை தொடர்கள் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த பிரபலமடைந்த ஸ்வாசிகாவை கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் பிரமாண்ட முறையில் நடைபெற்றது.

பிரேம் ஜேக்கப் - ஸ்வாசிகா

அவினாஷ் - தெரசா மரியா

அழகு தொடர் மூலம் சின்ன திரையில் அறிமுகமாகி வீட்டுக்கு வீடு வாசப்படி தொடரில் கண்ணன் பாத்திரத்தில் நடித்துவரும் அவினாஷுக்கு, அவரின் நீண்ட நாள் காதலி தெரசா மரியாவுடன் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. அவினாஷ் - தெரசா மரியா ஜோடி பள்ளிக் காலத்தில் இருந்து கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் காதலித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவினாஷ் - தெரசா மரியா

விராட் - நவீனா

அன்பே வா தொடரில் வருண் பாத்திரத்தில் நடித்து பிரபலமான விராட், ஒப்பனைக் கலைஞர் நவீனாவை கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொண்டார். விராட் - நவீனா திருமணம் சொந்த பந்தங்கள் முன்னிலையில் மாமல்லபுரத்தில் நடைபெற்றது.

விராட் - நவீனா

சந்தியா - முரளி கிருஷ்ணா

பட்டிமன்ற பேச்சாளராக இருந்து சின்ன திரையில் நுழைந்தவர் நடிகை அவள் சந்தியா. இவருக்கு நடனக் கலைஞர் சாந்தியின் மகனான முரளி கிருஷ்ணாவுடன் திருமணம் நடைபெற்றது. தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சக்திவேல் தொடரில் சந்தியா நடித்துவரும் நிலையில், அவருக்கு மாமியாராக நடனக் கலைஞர் சாந்தி நடித்துவருகிறார். நிஜவாழ்க்கையிலும் சந்தியா, சாந்தியின் மருமகளாகி இருக்கிறார்.

சந்தியா - முரளி கிருஷ்ணா

ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த நடிகர், நடிகர்களை தங்கள் வாழ்க்கையில் தொடர்புப்படுத்திக் கொண்டு அவர்களுடைய சந்தோஷத்தை தங்களின் சந்தோஷமாக நினைத்து கொண்டாடுகிறார்கள்.

இந்த ஆண்டு திருமணம் செய்திருக்கும் சின்ன திரை நட்சத்திர ஜோடிகளுடன் இணைந்து ரசிகர்களும் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 500 கோடி வசூலித்தும் ஏமாற்றத்தைக் கொடுத்த கூலி!

பாஜக கூட்டத்தில் பங்கேற்க அண்ணாமலை வருகை!

ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு மோரீஷஸ் பிரதமர் அஞ்சலி!

தில்லியில் EPS! | ADMK

தெருநாய்கள் தொல்லை: சென்னை மாநகராட்சியின் புதிய முயற்சி!

SCROLL FOR NEXT