முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

வெற்றி முனைப்பில் திமுக; தடுக்க முடியுமா பாமக?

விக்கிரவாண்டி தொகுதியைத் தக்க வைக்க திமுகவும், அதைத் தட்டிப் பறிக்க பாமகவும் தீவிரம்.

Updated On : 8 ஜூலை, 2024 at 2:27 AM
திமுக அன்னியூர் அ.சிவா, பாமக சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி பொ. அபிநயா
பகிர்:

விழுப்புரம்: மூன்றாண்டு கால திமுக ஆட்சியின் சாதனைகளுக்கு மக்கள் அளிக்கும் அங்கீகாரமாக, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்று தொகுதியைத் தக்க வைக்க திமுகவும், இடைத்தேர்தலில் வரலாற்று வெற்றியைப் பெறுவோம் என பாமகவும் தீவிர களப் பணியாற்றுவதால், கூடுதல் கவனம் பெற்றிருக்கிறது விக்கிரவாண்டி தொகுதி.

கடலூர், விழுப்புரம் மாவட்டங் கள் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டமாக இருந்தபோது, 1951-ஆம் ஆண்டில் உருவானது விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி. 1957-ஆம் ஆண்டில் தொகுதி மறுசீரமைப்பு காரணமாக, வளவனூர் தொகுதியானது.

1967-இல் வளவனூர் தனித் தொகு தியாக்கப்பட்ட நிலையில், 1977-இல் தொகுதி மறுசீரமைப்பின்போது, வள வனூர் தொகுதி மறைந்து கண்டமங்க லம் தனித் தொகுதியானது. 2011-இல் தொகுதி மறுசீரமைப்பில் மீண்டும் விக்கிரவாண்டி தொகுதியானது.

2011 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் கு.ராதாமணியை வீழ்த்தி,அதிமுக கூட்டணியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆர். ராமமூர்த்தி வெற்றி பெற்றார். 2016 தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஆர். வேலுவை வீழ்த்தி, திமுகவின் கு.ராதா மணிவென்றார்.உடல்நலக்குறைவால் கு.ராதாமணி இறந்ததால் இடைத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில், அப்போதைய ஆளுங்கட்சியான அதிமுக ஆர்.முத்தமிழ்ச்செல்வன், திமுக வேட்பாளர் நா.புகழேந்தியை 44,924 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் நா.புகழேந்தியும், அதிமுக சார்பில் ஆர்.முத்தமிழ்ச்செல்வனும் மீண்டும் போட்டியிட்டனர். இதில், 9,573 வாக்குகள் அதிகம் பெற்று திமுக வேட்பாளர் நா.புகழேந்தி வெற் றிபெற்றார். இந்நிலையில், புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி இறந்தார். இதையடுத்து, இந்தத் தொகுதி 2 - ஆவது முறையாக இடைத்தேர் தலை சந்திக்கிறது. தொகுதி தொகையில் 65 சத வீதம் வரை வன் னியர்களும், ஆதி திராவிடர் சமு தாயத்தினரும் உள்ளனர். இஸ் லாமியர்கள், கிறிஸ்தவர்கள், செட்டியார், ரெட்டியார், உடையார், நாயுடு என பிற சமூகத்தினரும் உள்ளனர்.

தேர்தல் களத்தில் 29 பேர் விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் அ.சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் பொ. அபிநயா மற்றும் பிற அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 11 வேட்பாளர்கள், 18 சுயேச்சைகள் என மொத் தம் 29 பேர் களத்தில் உள்ளனர். 29 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், களத்தில் மும்முனைப் போட்டியே உள்ளது.

வெற்றித் திட்டத்தில் திமுக: தற்போது நடைபெறும் இடைத்தேர்த லில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற திமுக தீவிரமாகப் பணி யாற்றி வருகிறது.

முதல்முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அன்னியூர் அ.சிவா, தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்.

இவருக்கு ஆதரவாக, 30-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், எம்.பி.க்கள்,எம் எல்ஏக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் என கட்சி நிர்வாகிகள் தொகுதியில் முகாமிட்டு தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

தேர்தலை அதிமுகவும், தேமுதிகவும் புறக்கணித்துள்ள நிலையில், வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டதாக திமு கவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். வாக்காளர்களை தினந்தோறும் சந் தித்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர் திமுகவினர்.

கடந்த மூன்றாண்டுகால திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள்நலத் திட்டங்களைப் பட்டியலிட்டு துண்டுப்பிரசுரங்களாக வழங்கி, கூட்டணி பலத்துடன் தீவிர களப் பணியாற்றி வருகிறது திமுக. பலத்தை நிரூபிக்கத் தயாராகும் பாமக விழுப்புரம் மாவட்டத்தி லுள்ள 7 பேரவைத் தொகுதிகளில் வன்னியர் சமுதாய மக்களின் வாக்கு வங்கி அதிகமுள்ள தொகுதியாக விக்கிரவாண்டி திகழ்கிறது. இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, ஜாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு ஆகியவற்றை மையப்படுத்தி பிரசாரம் செய்கிறது பாமக.

வேட்பாளர் சி.அன்புமணி, வன்னியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவராக உள்ளார். இவர், கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு 41,428 வாக்குகளைப் பெற்றார்.

தொடர்ந்து, 2019-இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் இத் தொகுதியில் அதிமுக 1,13,766 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற நிலையில், அப்போது கூட்டணியிலிருந்த பங்கை அளித்திருக்கிறது. அண்மையில் நடைபெற்ற மக் களவைத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் முரளிசங்கர், விக்கிரவாண்டி பேரவைத் தொகுதியில் மட்டும் 32,198 வாக்குகளைப் பெற்றார்.

அதிமுக வேட்பாளர் பாக்ய ராஜ், விக்கிரவாண்டி தொகுதி யில் 65,365 வாக்குகளைப் பெற் றுள்ள நிலையில், அந்தவாக்குகள் தங்க ளுக்குக் கிடைக்கும் பட்சத்தில் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையில் உள்ளது பாமக.

பாமக நிறுவனர் ச.ராமதாஸ், கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகி யோர் கிராமம், கிராமமாக வாக்குசே கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந் துள்ள பாமகவினர், வன்னிய சமுதாய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் திண்ணைப் பிரசாரம் செய்கின்றனர்.

போட்டியளிக்கும் நாம் தமிழர் கட்சி: வழக்கம்போல, இந்தத் தேர்தலி லும் தனித்தே களம் காண்கிறது நாம் தமிழர் கட்சி. இதன் வேட்பாளர் மருத் துவர் அபிநயா பொன்னிவளவன் விக்கிரவாண்டி தொகுதியைச் சேர்ந்தவர்.

மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு 65,381 வாக்குகளைப் பெற்றவர்.

நாதக தனது அங்கீகாரத்தை நிலை நிறுத்த, திமுக, பாமகவுக்கு சவாலாக களத்தில் உள்ளது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விக்கிர வாண்டி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்குக சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

இடைத்தேர்தலை அதிமுக, தேமு திக புறக்கணித்துள்ள நிலையில், அக் கட்சியினர் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் சீமான் கோரி வருகிறார்.

விக்கிரவாண்டி தொகுதியைத் தக்க வைக்க திமுகவும், அதைத் தட்டிப் பறிக்க பாமகவும் தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுக, தேமு திக வாக்காளர்கள் என்ன நிலைப் பாட்டை எடுக்கப் போகிறார்கள் என் பது இடைத் தேர்தல் வெற்றி-தோல் வியை நிர்ணயிக்கும் என்று கருத இட மிருக்கிறது.

பாஜக கூட்டணியில் இருப்பதால், பாமகவை தோற்கடிக்க திமுகவுக்கோ அல்லது நாம் தமிழர் கட்சிக்கோ தங்களது வாக்குகளை வாக்காளர்கள் மடைமாற்றம் செய்வார்களா அல்லது ஜாதிய உணர்வால் பாமகவை ஆதரிக்க முற்படுவார்களா என்பதை விக்கிரவாண்டி இடைத் தேர்தல் முடிவு (ஜூலை 13-சனிக்கிழமை) வெளிப்படுத்தும்.

2021 சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்

நா. புகழேந்தி (திமுக) 93,730

ஆர். முத்தமிழ்ச்செல்வன் (அதிமுக) 84,157

ஆர்.ஷீபா ஆஷ்மி (நாம் தமிழர் கட்சி) 8,216

அய்யனார் (அமமுக) 3,053

நோட்டா 1,122



வாக்காளர்கள் விவரம்

ஆண் வாக்காளர்கள் 1,16,962

பெண் வாக்காளர்கள் 1,20,040

மூன்றாம் பாலினத்தவர்: 29

மொத்தம்: 2,37,037

முழு கட்டுரையைப் படிக்க →